LOADING...
பேக்கிங் சோடாவைக் கொண்டு வெள்ளை நிற ஷூவை பளிச்சென சுத்தம் செய்வது எப்படி?
வெள்ளை நிற ஷூவை சுத்தம் செய்யும் முறை

பேக்கிங் சோடாவைக் கொண்டு வெள்ளை நிற ஷூவை பளிச்சென சுத்தம் செய்வது எப்படி?

எழுதியவர் Prasanna
Mar 13, 2026
06:58 pm

செய்தி முன்னோட்டம்

சமையலறையில் பயன்படுத்தும் பேக்கிங் சோடாவை கொண்டு அழுக்கடைந்த வெள்ளை நிற ஷூக்களை எவ்வாறு எளிதாகப் புத்தம் புதியது போல மாற்றலாம் என்பதைப் பார்க்கலாம். வெள்ளை நிற ஷூக்கள் அணிவதற்கு அழகாக இருந்தாலும், அவை விரைவில் அழுக்காகிவிடும். வாஷிங் மெஷினில் போட்டு துவைத்தால் ஷூக்கள் பாழாகிவிடும் என்ற கவலை பலருக்கும் உண்டு. இதற்கு தீர்வாக, உங்கள் வீட்டுச் சமையலறையில் உள்ள பேக்கிங் சோடாவை வைத்தே ஷூக்களை எளிதாகச் சுத்தம் செய்யலாம். தேவையான பொருட்கள்: பேக்கிங் சோடா - 2 டீஸ்பூன் டிடர்ஜென்ட் லிக்விட் அல்லது சோப்புத் தூள் - 1 டீஸ்பூன் பழைய டூத் பிரஷ் வெதுவெதுப்பான நீர்

லைஃப்ஸ்டைல்

சுத்தம் செய்யும் முறை:

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடா மற்றும் சோப்புத் தூளை எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு வெதுவெதுப்பான நீர் சேர்த்து பசை (Paste) போலக் கரைத்துக் கொள்ளவும். ஷூவில் உள்ள லேஸ்களை தனியாகக் கழற்றி, இதே கலவையில் ஊற வைக்கவும். பழைய டூத் பிரஷ்ஷை இந்தப் பசையில் நனைத்து, ஷூவில் அழுக்கு மற்றும் கறை உள்ள இடங்களில் மென்மையாகத் தேய்க்கவும். குறிப்பாக ஷூவின் பக்கவாட்டுப் பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் அல்லது ரப்பர் பகுதிகளில் நன்கு தேய்க்கவும். தேய்த்து முடித்த பிறகு, சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை அப்படியே ஊற விடவும். இறுதியில் ஒரு சுத்தமான துணியால் ஷூவைத் துடைக்கவும் அல்லது குளிர்ந்த நீரில் மென்மையாகக் கழுவவும்.

Advertisement