LOADING...
30 லட்சம் யூனிட்டுகள் விற்பனையை எட்டிய மாருதி டிசையர்
மாருதி டிசையர் செடான்

30 லட்சம் யூனிட்டுகள் விற்பனையை எட்டிய மாருதி டிசையர்

எழுதியவர் Prasanna
Mar 13, 2026
03:45 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki), தனது பிரபலமான செடான் ரக காரான டிசையர் (Dzire) விற்பனையில் 30 லட்சம் யூனிட்கள் என்ற பிரம்மாண்ட மைல்கல்லை எட்டியுள்ளது. இந்திய சாலைகளில் அதிகம் காணப்படும் கார்களில் ஒன்றான மாருதி டிசையர், கடந்த பல ஆண்டுகளாகச் சந்தையில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருகிறது. தற்போது 30 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளதன் மூலம், இந்தியாவின் வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பம் செடான் காராக இது மீண்டும் நிரூபித்துள்ளது.

டிசையர்

வெற்றிக்கான காரணங்கள்:

நடுத்தர வர்க்கக் குடும்பங்களைக் கவரும் வகையில் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை இந்த கார் வழங்குகிறது. மாருதி நிறுவனத்தின் பரந்து விரிந்த சேவை மையங்கள் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு அப்டேட்டிலும் காலத்திற்கு ஏற்றவாறு டச் ஸ்கிரீன், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை நிறுவனம் மேம்படுத்தி வருகிறது. இந்த காரணங்களினால் இந்திய வாடிக்கையாளர்களின் ஆஸ்தான செடான் மாடலாக இந்த மாருதி டிசையர் இருக்கிறது.

Advertisement