LOADING...
23 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்த பெருமை; இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருது பெறுகிறார் கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்துவுக்கு 'ஞானபீட விருது' அறிவிப்பு

23 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்த பெருமை; இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருது பெறுகிறார் கவிஞர் வைரமுத்து

எழுதியவர் Sekar Chinnappan
Mar 14, 2026
06:51 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல கவிஞரும், புகழ்பெற்ற பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதாகக் கருதப்படும் ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு எனப் போற்றப்படும் இந்த விருதைப் பெறும் மூன்றாவது தமிழ் எழுத்தாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஏற்கனவே கலை மற்றும் இலக்கியத் துறையில் பல மைல்கற்களை எட்டியுள்ள வைரமுத்துவின் கிரீடத்தில் இந்த விருது மற்றொரு வைரமாகச் சேர்ந்துள்ளது. சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை ஏழு முறை வென்று சாதனை படைத்துள்ளார். 2003இல் கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்காக இந்த விருதைப் பெற்றார். இலக்கியப் பங்களிப்பிற்காக 2014இல் மத்திய அரசின் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

நெகிழ்ச்சி

தமிழ்க் கவிதையின் குறை தீர்ந்தது - வைரமுத்து நெகிழ்ச்சி

விருது அறிவிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கவிஞர் வைரமுத்து, "தமிழ்க் கவிதைக்கு ஞானபீட விருது கிடைக்கவில்லை என்ற குறை என்னால் கழிந்தது. இந்த விருது தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் கிடைத்த அங்கீகாரம். இனி புதிய பாய்ச்சலுடன் என் இலக்கியப் பணி தொடரும்." எனத் தெரிவித்துள்ளார். பாரதிய ஞானபீட அமைப்பால் 1965 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருது, இந்திய இலக்கிய உலகின் உச்சமாகக் கருதப்படுகிறது. இதற்கு முன் தமிழில் 1975இல் அகிலன் (சித்திரப்பாவை நாவலுக்காக), 2002இல் ஜெயகாந்தன் ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தமிழருக்கு, அதுவும் ஒரு கவிஞருக்கு இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement