LOADING...
14வது நாளை எட்டிய ஈரான் போர்; இன்றைய முக்கிய நிகழ்வுகள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை
14வது நாளை எட்டிய ஈரான் போர்

14வது நாளை எட்டிய ஈரான் போர்; இன்றைய முக்கிய நிகழ்வுகள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை

எழுதியவர் Sekar Chinnappan
Mar 13, 2026
07:59 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா - இஸ்ரேல் vs ஈரான் இடையே நடந்து வரும் தாக்குதல் இன்று 11வது நாளை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி 28இல் தொடங்கிய இந்த மோதல், மத்திய கிழக்கு பிராந்தியத்தையே ஒரு பெரும் போர்முனையாக மாற்றியுள்ளது. இந்த போரில் கடந்த 24 மணி நேரத்தில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் முக்கிய நிகழ்வுகள் இதோ:

முக்கிய நிகழ்வுகள்

டெஹ்ரான் மீது தீவிரத் தாக்குதல்

இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க விமானப் படைகள் டெஹ்ரான், இஸ்ஃபஹான், கரஜ் மற்றும் காஷான் ஆகிய நகரங்களில் உள்ள ராணுவ இலக்குகள் மீது நூற்றுக்கணக்கான குண்டுகளை வீசின. குறிப்பாக, பார்ச்சின் பகுதியில் உள்ள 'தலேகான் 2' அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஈரான் தனது பதிலடியை அண்டை நாடுகளுக்கும் விரிவுபடுத்தியது. துபாய், பஹ்ரைன் விமான நிலையம் மற்றும் குவைத் சர்வதேச விமான நிலையம் ஆகிய இடங்களைக் குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. துபாயில் "சிறிய அளவிலான ட்ரோன் விபத்து" ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு உறுதி செய்தது.

எச்சரிக்கை

ஈரானின் புதிய தலைமையின் எச்சரிக்கை

ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா காமேனி, ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து முடக்கி வைக்கப்படும் என்று தனது முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது. மேற்கு ஈராக்கில் அமெரிக்காவின் KC-135 எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானது. இது ஈரானியத் தாக்குதலால் நிகழவில்லை என்று அமெரிக்கா கூறினாலும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஐநா சபையின் தகவல்படி, போரினால் ஈரானுக்குள் சுமார் 3.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதுவரை 1,300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement

பிரதமர் மோடி

பிரதமர் மோடி ஈரான் அதிபருடன் பேச்சுவார்த்தை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தப் போர் விரைவில் முடியும் என்று மீண்டும் கூறியுள்ளார். இருப்பினும், அமெரிக்க ராணுவம் இதுவரை ஈரானுக்குள் 6,000 க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கி அழித்துள்ளதாகப் பென்டகன் தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர் மோடி ஈரான் அதிபர் பெசெஷ்கியானுடன் பேசி, போரை நிறுத்திவிட்டுப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு வலியுறுத்தியுள்ளார். ஈரானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். யுனெஸ்கோ தகவல்படி, டெஹ்ரானில் உள்ள கோலெஸ்தான் அரண்மனை மற்றும் இஸ்ஃபஹானில் உள்ள பழமையான மசூதிகள் தாக்குதல்களில் சேதமடைந்துள்ளன.

Advertisement