LOADING...
சிஎஸ்கே டிரஸ்ஸிங் ரூம் ரகசியங்களை உடைத்த முன்னாள் வீரர்!
மகேந்திர சிங் தோனி

சிஎஸ்கே டிரஸ்ஸிங் ரூம் ரகசியங்களை உடைத்த முன்னாள் வீரர்!

எழுதியவர் Prasanna
Mar 14, 2026
02:46 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் (IPL) கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் ஒருவர் வெளியிட்டுள்ள அதிரடியான கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தோனிக்கு தற்போது 44 வயதாகிறது. இருப்பினும், அவரது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் திறன் இன்னும் குறையவில்லை. ஆனால், அவரது முழங்கால் காயம் மற்றும் வயது காரணமாக அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற விவாதங்கள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பத்ரிநாத் அணியின் டிரஸ்ஸிங் ரூம் சூழல் குறித்துப் பேசியுள்ளார்.

கிரிக்கெட்

அவர் கூறிய முக்கிய கருத்துக்கள்:

"சிஎஸ்கே அணியில் தோனியின் இடத்தைப் பற்றி யாராலும் கேள்வி எழுப்ப முடியாது. பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் அல்லது அணியின் உரிமையாளர்கள் கூட, தோனியிடம் சென்று 'நீங்கள் அடுத்த போட்டியில் விளையாட வேண்டாம், ஓய்வு எடுங்கள்' என்று சொல்லும் துணிச்சல் கிடையாது. அணியில் அவர் எப்போது விளையாட வேண்டும், எப்போது விலக வேண்டும் என்பதை அவரேதான் முடிவு செய்வார்" என்று பத்ரிநாத் கூறியுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் தற்போது அணியை வழிநடத்தினாலும், களத்தில் இப்போதும் தோனியின் ஆதிக்கம் குறையவில்லை என்றும், முக்கிய முடிவுகளில் தோனியின் பங்களிப்பே இப்போதும் முதன்மையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement