LOADING...
மெட்டாவில் 20% ஊழியர்களுக்குக் கல்தா? AI பந்தயத்தில் முந்துவதற்காக எடுக்கப்படும் விபரீத முடிவு
மெட்டாவில் 15,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்

மெட்டாவில் 20% ஊழியர்களுக்குக் கல்தா? AI பந்தயத்தில் முந்துவதற்காக எடுக்கப்படும் விபரீத முடிவு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 14, 2026
12:10 pm

செய்தி முன்னோட்டம்

மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம், தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 20 சதவீதத்தினரை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் பில்லியன் கணக்கிலான டாலர்களை முதலீடு செய்து வரும் நிலையில், அந்தச் செலவுகளைச் சமாளிக்க இந்த அதிரடி முடிவை மெட்டா எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டிசம்பர் 31 நிலவரப்படி, மெட்டா நிறுவனத்தில் சுமார் 79,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போதைய 20 சதவீத ஆட்குறைப்புத் திட்டத்தின்படி, சுமார் 15,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது மெட்டா நிறுவன வரலாற்றிலேயே மிகப்பெரிய பணிநீக்கமாகக் கருதப்படுகிறது. முன்னதாக 2022 மற்றும் 2023இல் முறையே 11,000 மற்றும் 10,000 ஊழியர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது.

முக்கிய காரணம்

AI முதலீடுகளே பணிநீக்கத்திற்கு முக்கியக் காரணம்

மெட்டா நிறுவனம் தனது சூப்பர் இன்டெலிஜென்ஸ் லேப் பிரிவிற்காகப் பெரும் தொகையைச் செலவிட்டு வருகிறது. 2028 ஆம் ஆண்டிற்குள் ஏஐ உட்கட்டமைப்பிற்காக மட்டும் சுமார் 600 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய ஜுக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளார். "முன்பு பெரிய குழுக்கள் செய்த வேலைகளை, இப்போது ஏஐ உதவியுடன் திறமையான ஒரு நபரே செய்துவிட முடியும்." என்று ஜுக்கர்பெர்க் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது, இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

சவால்கள்

ஏஐ பந்தயத்தில் நிலவும் சவால்கள்

மறுபுறம், மெட்டா நிறுவனம் ஏஐ பந்தயத்தில் பின்தங்கி வருவதாகவும் சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மெட்டாவின் புதிய மாடலான அவகேடோ சோதனைகளில் தோல்வியடைந்ததால் அதன் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. இருப்பினும், மார்க்கெட் போட்டியைச் சமாளிக்க மல்ட்புக் போன்ற ஏஐ சமூக வலைதளங்களையும், மேனஸ் போன்ற ஸ்டார்ட்அப்களையும் பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்க மெட்டா திட்டமிட்டுள்ளது.

Advertisement

விளக்கம்

மெட்டாவின் விளக்கம்

இந்தப் பணி நீக்கம் குறித்த செய்திகளை மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் மறுத்துள்ளார். "இவை யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட செய்திகள்." என்று அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அமேசான், மைக்ரோசாப்ட், டிசிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்களும் ஏஐ முதலீடுகளுக்காக ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது, மெட்டா ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement