LOADING...
'அப்பா 'V' வேண்டாம்.. அம்மா 'S' போதும்!' நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பெயரில் திடீர் மாற்றம்?
தந்தை பெயரின் இனிஷியலை ஜேசன் சஞ்சய் நீக்கி அம்மா பெயரை வைத்துள்ளதாக பரவும் தகவல்

'அப்பா 'V' வேண்டாம்.. அம்மா 'S' போதும்!' நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பெயரில் திடீர் மாற்றம்?

எழுதியவர் Sekar Chinnappan
Mar 13, 2026
03:42 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்துச் செய்திகள் கடந்த சில மாதங்களாகவே ஊடகங்களில் பேசுபொருளாக உள்ளன. இந்நிலையில், அவர்களது மகன் ஜேசன் சஞ்சய் தனது பெயரில் செய்துள்ள ஒரு நுட்பமான மாற்றம் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஜேசன் சஞ்சய் சினிமாவிற்காக தனது பெயரில் தந்தையின் இனிஷியலான 'V' என்பதை முன்னர் பயன்படுத்தி வந்ததாகவும், தற்போது அதை நீக்கிவிட்டு, தாயார் சங்கீதாவின் பெயரைக் குறிக்கும் 'S' என்ற எழுத்தை இணைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அவர் தன்னை "ஜேசன் சஞ்சய் S" என்று அழைத்துக்கொள்வதாகக் கூறப்படுகிறது.

தனித்துவம்

தனித்துவமான அடையாளமா?

ஜேசன் சஞ்சய் ஏற்கனவே 'சிக்மா' என்ற குறும்படத்தை இயக்கி, அதன் மூலம் தொழில்நுட்ப ரீதியாகவும், கதை சொல்லும் விதத்திலும் பாராட்டுகளைப் பெற்றார். இந்நிலையில், தனது தந்தையின் நட்சத்திரப் புகழைப் பயன்படுத்திக் கொள்ளாமல், தனது சொந்த உழைப்பின் மூலம் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடிக்க அவர் விரும்புவதாகவும், அதன் வெளிப்பாடாகவே இந்த இனிஷியல் மாற்றம் இருக்கலாம் என்றும் திரையுலகில் ஒரு தரப்பால் கூறப்படுகிறது.

சிக்கல்

ஜனநாயகன் படச் சிக்கல்கள்

ஒருபுறம் மகனின் பெயர் மாற்றம் பேசுபொருளாக இருக்க, மறுபுறம் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் தணிக்கைக் குழுவின் கெடுபிடிகளால் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. ₹120 கோடி ஓடிடி ஒப்பந்தம் ரத்தான செய்தி ஏற்கனவே ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், ஜேசன் சஞ்சயின் இந்த முடிவு விஜயின் குடும்பச் சூழல் குறித்த புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதுவரை இந்த இனிஷியல் மாற்றம் குறித்து விஜயோ அல்லது ஜேசன் சஞ்சயோ அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement