இனி விண்டோஸ் லேப்டாப்பையே கேம் கண்சோல் போலப் பயன்படுத்தலாம்
செய்தி முன்னோட்டம்
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 11 (Windows 11) கணினிகளுக்காக 'எக்ஸ்பாக்ஸ் மோட்' (Xbox Mode) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற 'கேம் டெவலப்பர்ஸ் கான்பரன்ஸ் 2026' (GDC 2026) நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த அதிரடி மாற்றத்தின் மூலம், விண்டோஸ் 11 இயங்குதளத்தில் இயங்கும் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கணினிகளை இனி ஒரு எக்ஸ்பாக்ஸ் கன்சோல் போலவே பயன்படுத்த முடியும்.
மைக்ரோசாஃப்ட்
சிறப்பம்சங்கள்:
கன்சோல் போன்ற இடைமுகம் (UI): இந்த மோட் ஆக்டிவேட் செய்யப்பட்டவுடன், விண்டோஸின் சாதாரண டெஸ்க்டாப் மறைந்து, எக்ஸ்பாக்ஸ் கன்சோலில் இருப்பது போன்ற பெரிய ஐகான்கள் கொண்ட முழுத்திரை தோற்றம் தோன்றும். இதனை மவுஸ் இல்லாமல் 'கன்ட்ரோலர்' மூலமே எளிதாக இயக்கலாம். மேம்படுத்தப்பட்ட வேகம்: எக்ஸ்பாக்ஸ் மோடில் விளையாடும்போது, கணினியின் பின்னணியில் இயங்கும் தேவையற்ற மென்பொருள்கள் முடக்கப்படும். இதனால் கேம்கள் மிக வேகமாகவும், தடையின்றியும் இயங்கும். சுமார் 2ஜிபி வரை ரேம் (RAM) மிச்சப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சாதனங்களுக்கும்: இது லேப்டாப், டெஸ்க்டாப் மட்டுமன்றி கையடக்க கேமிங் சாதனங்கள் (Handheld devices) மற்றும் டேப்லெட்களிலும் செயல்படும். வெளியீடு: இந்த வசதி வரும் ஏப்ரல் 2026 முதல் விண்டோஸ் 11 பயனர்களுக்குக் கிடைக்கும்.