ரஷ்யாவிடமிருந்து 30 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் தளர்வுகளைத் தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து சுமார் 30 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அரசியல் சூழல்களுக்கு மத்தியில் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்குவதில் இந்தியா முன்னிலை வகித்து வந்தது. ஆனால், அமெரிக்காவின் அழுத்தத்தைத் தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்முதலை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து வருகிறது. ரஷ்யாவிற்கு மாற்றாக அமெரிக்காவின் உந்துதலின் பேரில் சவூதி அரேபியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்கி வந்தது இந்தியா.
இந்தியா
போர் பதற்றம், எண்ணெய் இறக்குமதியில் சுணக்கம்
இந்த நிலையில் தான் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பிரச்சினை காரணமாக மேற்கூறிய நாடுகளிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில் சுணக்கம் ஏற்பட்டது. ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் கட்டுப்படுத்தத் தொடங்கியதில் இருந்து இந்தியாவிற்கு எண்ணெய் வந்து சேர்வதில் பிரச்சினைகள் எழுந்தன. இதனால் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கிக் கொள்ள அமெரிக்கா தளர்வுகள் அளித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது சுமார் 30 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கியிருக்கிறது. இந்திய அரசு நிறுவனமான இந்திய ஆயிலே சுமார் 10 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது. ரிலையன்ஸே மிகவும் குறைவாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியிருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.