LOADING...
7 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த மஹிந்திராவின் பேட்மேன் எடிஷன் எலெக்ட்ரிக் கார்
மஹிந்திரா BE 6 Batman Edition

7 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த மஹிந்திராவின் பேட்மேன் எடிஷன் எலெக்ட்ரிக் கார்

எழுதியவர் Prasanna
Mar 12, 2026
04:27 pm

செய்தி முன்னோட்டம்

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய BE 6 'பேட்மேன் எடிஷன்' எலெக்ட்ரிக் கார் மாடல் மீண்டும் ஒருமுறை விற்பனையில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் தனது BE 6 எலக்ட்ரிக் காரின் பேட்மேன் எடிஷனின் இரண்டாவது பேட்சுக்கான முன்பதிவை சமீபத்தில் தொடங்கியது. ஒதுக்கப்பட்டிருந்த மொத்தம் 999 வாகனங்களும், முன்பதிவு தொடங்கிய வெறும் 7 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டன. இதன் முதல் தொகுப்பு 135 வினாடிகளிலேயே விற்றுத் தீர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்பெஷல் எடிஷன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 28.49 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான மாடலை விட ரூ. 1.59 லட்சம் கூடுதலாகும். இதன் டெலிவரி ஏப்ரல் 10 முதல் தொடங்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

மஹிந்திரா

காரின் சிறப்பு அம்சங்கள்:

பேட்மேன் சூப்பர்ஹீரோவை மையமாக வைத்து, கார் முழுவதும் 'சாடின் பிளாக்' (Satin Black) நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் வெளிப்புறம், சக்கரங்கள் மற்றும் உட்புற இருக்கைகளில் பேட்மேன் முத்திரைகள் பொறிக்கப்பட்டுள்ளன. உட்புறம் கருப்பு நிற லெதர் மற்றும் கோல்டு நிறத் தையல்கள் பேட்மேன் தீம் அனிமேஷன் கொண்ட திரை வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 79 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 682 கி.மீ தூரம் வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டிருக்கிறது. டிசி காமிக்ஸ் ரசிகர்களையும், சொகுசு மின்சார கார் பிரியர்களையும் கவரும் வகையில் வந்துள்ள இந்த கார், இந்திய சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement