LOADING...
திரை உலகச் சகாப்தம்: நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

திரை உலகச் சகாப்தம்: நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

எழுதியவர் Sekar Chinnappan
Dec 12, 2025
11:44 am

செய்தி முன்னோட்டம்

திரை உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு, அவரது 75வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திரு ரஜினிகாந்த் அவர்களின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

வாழ்த்து

பிற முக்கியத் தலைவர்களின் வாழ்த்து

முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், "ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்! மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!" என புகழாரம் சூட்டியுள்ளார். ரஜினிகாந்த்துக்கு அரசியல், சினிமா மற்றும் பொதுத் தளங்களில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Advertisement