ஜிவி பிரகாஷின் 'ஹேப்பி ராஜ்' மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்த் திரைக்குத் திரும்புகிறார் அப்பாஸ்
செய்தி முன்னோட்டம்
படையப்பா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் அப்பாஸ், 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகிற்குத் திரும்புகிறார். அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கும் 'ஹேப்பி ராஜ்' என்ற புதிய படத்தில் ஜிவி பிரகாஷ்குமாருடன் இணைந்து அவர் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக லவ்வர் படத்தில் நடித்து பிரபலமான ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மரியா இளஞ்செழியன், இயக்குநர் பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு 'ஹேப்பி ராஜ்' எனப் பெயரிடப்பட்டதற்கான காரணத்தையும் இயக்குநர் விளக்கி உள்ளார்.
காரணம்
படத்தின் பெயர்க் காரணம்
இயக்குநர், "இன்றைய உலகில் அதிகரித்து வரும் எதிர்மறையான சூழலுக்கு ஒரு மாற்று மருந்தாக, மகிழ்ச்சியைக் கொண்டாடும் ஒரு படத்தை உருவாக்க விரும்பினேன். இந்தப் படத்தில் 'ஹேப்பி' என்ற வார்த்தை நூற்றுக்கும் மேற்பட்ட முறை ஒலிக்கும். இது மீண்டும் மீண்டும் வருவதாக இல்லாமல், நம்பிக்கையின் தாளமாக இருக்கும்." என்றார். 'ஹேப்பி ராஜ்' படத்தை ஜெயவர்த்தனன் தயாரிக்க, ஜெயகாந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அப்பாஸ் மீண்டும் தமிழ்த் திரைக்குத் திரும்புவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜிவி பிரகாஷ் செல்வராகவன் இயக்கும் 'மென்டல் மனதில்' மற்றும் பா.ரஞ்சித்தின் 'நீலம் புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் ஒரு படம் எனப் பல படங்களில் பிஸியாக உள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#happyraj first look soon pic.twitter.com/5F5oB1rPEr
— G.V.Prakash Kumar (@gvprakash) December 6, 2025