விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்: மீண்டும் திரைக்கு வருகிறது பிளாக்பஸ்டர் ஹிட் தெறி
செய்தி முன்னோட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜயின் கடைசி படமான ஜனநாயகன் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில், அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தெறி திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகவுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தெறி திரைப்படம், விஜயின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இதில் விஜய் ஜோசப் குருவில்லா மற்றும் விஜய் குமார் என இரு வேறு பரிமாணங்களில் நடித்து அசத்தியிருப்பார்.
ரீரிலீஸ்
ரீரிலீஸ் ட்ரெண்ட் மற்றும் எதிர்பார்ப்பு
ஜிவி பிரகாஷின் இசை, சமந்தா மற்றும் எமி ஜாக்சனின் நடிப்பு என அனைத்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. குறிப்பாக விஜய்யின் போலீஸ் கெட்டப் மற்றும் தந்தை-மகள் சென்டிமென்ட் காட்சிகளுக்கு இன்று வரை தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பழைய ஹிட் படங்களை மீண்டும் வெளியிடும் ரீரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே விஜயின் கில்லி, துப்பாக்கி போன்ற படங்கள் மீண்டும் வெளியாகி வசூல் சாதனை படைத்தன. அந்த வரிசையில் தற்போது தெறி இணைய உள்ளது. விஜயின் அரசியல் வருகைக்குப் பிறகு அவரது பழைய படங்களைக் கொண்டாடுவது ரசிகர்களிடையே ஒரு எழுச்சியாகவே மாறியுள்ளது. தெறி படத்தின் வெளியீட்டு தேதி குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
விரைவில் திரையில்
— Kalaippuli S Thanu (@theVcreations) January 10, 2026
Thalapathy @actorvijay @Atlee_dir @gvprakash @Samanthaprabhu2 @iamAmyJackson #Theri pic.twitter.com/CKCx3M76mR