Year Ender 2025: இந்த ஆண்டின் அதிக வசூலான கோலிவுட்டின் டாப் 10 திரைப்படங்கள் இவைதான்
செய்தி முன்னோட்டம்
2025 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு ஒரு குறிப்பிடத்தக்கச் சாதனையைப் பதிவு செய்த ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டின் டாப் 10 திரைப்படங்கள் மொத்தமாக உலகளவில் ₹1600 கோடிக்கும் அதிகமாக வசூலித்து புதியச் சாதனையைப் படைத்துள்ளன. சாக்னிக் அறிக்கையின்படி, இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படம் உலகளவில் ₹518 கோடி வசூலித்து அதிக வசூல் செய்தப் படங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. நடிகர் அஜித்குமாரின் ஆக்ஷன் படமான 'குட் பேட் அக்லி' திரைப்படம் ₹248.25 கோடி வசூலுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அஜித்குமாரின் மற்றொரு படமான 'விடாமுயற்சி', ₹135.65 கோடி வசூலித்து தோல்விப்படமாக இருந்தாலும் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது.
தோல்விப் படங்கள்
கமல்ஹாசன், மதராஸி தோல்விப் படங்கள்
சிவகார்த்திகேயன் நடித்த 'மதராஸி' திரைப்படமும் ₹98.48 கோடி வசூலுடன், அதிக பட்ஜெட்டின் காரணமாக 'தோல்வி' என்ற முடிவைப் பெற்றது. இது பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்தது. இதேபோல், கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் மீண்டும் இணைந்த 'தக் லைஃப்' ₹97.25 கோடி மட்டுமே வசூலித்து தோல்வியில் முடிந்தாலும் பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்தது. சூர்யா நடிப்பில் வணிக ரீதியாக வெற்றி பெற்ற 'ரெட்ரோ' படம் ₹96.97 கோடி வசூலுடன் பட்டியலில் எட்டாவது இடமும், தனுஷ் இயக்கி நடித்த 'இட்லி கடை' ₹71.86 கோடி வசூலுடன் ஒன்பதாவது இடம் பிடித்தது. அதே சமயம், சசிகுமார் நடித்த, மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம், ₹86.25 கோடி வசூலித்து, பட்டியலில் பத்தாவது இடம் பிடித்தது.
பிரதீப் ரங்கநாதன்
நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜாக்பாட்
இந்த ஆண்டின் மிக லாபகரமான வெற்றியாளர் நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஆவார். அவர் நடிப்பில் வெளியான 'டிராகன்' திரைப்படம் ₹150.52 கோடி வசூலித்து பட்டியலில் மூன்றாவது இடம் பெற்றது. பிரதீப் ரங்கநாதனின் மற்றொருப் படமான 'டியூட்', ₹113.25 கோடி வசூலித்து பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்தது. இதன் மூலம், இந்த ஆண்டில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இரண்டு பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்த ஒரே நடிகர் எனும் சிறப்பை பிரதீப் ரங்கநாதன் பெற்றுள்ளார்.