LOADING...
ஆஸ்கர் விருதுகளை அள்ளப்போவது யாரு? 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட சின்னர்ஸ்! முழு பட்டியல் இதோ!
ஆஸ்கார் விருது 2026இல் சின்னர்ஸ் திரைப்படம் 16 பரிந்துரைகளுடன் புதிய சாதனை

ஆஸ்கர் விருதுகளை அள்ளப்போவது யாரு? 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட சின்னர்ஸ்! முழு பட்டியல் இதோ!

எழுதியவர் Sekar Chinnappan
Jan 22, 2026
08:16 pm

செய்தி முன்னோட்டம்

2026 ஆம் ஆண்டிற்கான 98 வது அகாடமி விருதுகளின் (ஆஸ்கார் விருது) பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சின்னர்ஸ் திரைப்படம் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் திரைப்படம் 13 பிரிவுகளில் பரிந்துரைகளைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு ஆஸ்கார் ரேசில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இடம்பிடித்துள்ளனர். சிறந்த நடிகர் விருதுக்கு டிமோதி சாலமேட் (மார்ட்டி சுப்ரீம்), லியோனார்டோ டிகாப்ரியோ (ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்), எத்தன் ஹாக் (ப்ளூ மூன்), மைக்கேல் பி ஜோர்டான் (சின்னர்ஸ்) பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

திரைப்படம்

சிறந்த திரைப்படத்திற்கான போட்டி

சிறந்த நடிகை விருதுக்கு ஜெஸ்ஸி பக்லி (ஹம்நெட்), எம்மா ஸ்டோன் (புகோனியா), ரோஸ் பைர்ன் (ஈஃப் ஐ ஹேட் லெக்ஸ் ஐ ஹேட் கிக் யு) பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சிறந்த இயக்குனர் விருதுக்கு ரையன் கூக்லர் (சின்னர்ஸ்), சோலி ஜாவோ (ஹம்நெட்), பால் தாமஸ் ஆண்டர்சன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சிறந்த திரைப்படத்திற்கான பிரிவில் சின்னர்ஸ், ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர், ஹாம்லெட், மார்டி சுப்ரீம், எஃப்1, ஃபிராங்கண்ஸ்டைன் உள்ளிட்ட 10 படங்கள் பலப்பரீட்சை நடத்துகின்றன. குறிப்பாக ரையன் கூக்லர் இயக்கத்தில் உருவான சின்னர்ஸ் திரைப்படம் தொழில்நுட்பப் பிரிவுகளிலும் அதிக பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.

அனிமேஷன்

அனிமேஷன் மற்றும் பிற பிரிவுகள்

அனிமேஷன் பிரிவில் ஜூடோபியா 2 மற்றும் எலியோ ஆகிய படங்கள் முக்கியப் போட்டியாளர்களாக உள்ளன. மேலும், சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் த சீக்ரெட் ஏஜென்ட் உள்ளிட்ட படங்கள் இடம்பிடித்துள்ளன. மார்ச் மாதம் நடைபெறவுள்ள விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.

Advertisement