ஏப்ரல் 23 லாக் பண்ணுங்க! மம்மூட்டி-மோகன்லால் நடிக்கும் பேட்ரியாட் படத்தில் நயன்தாரா! போஸ்டரில் ஒளிந்திருந்த ரகசியத்தை கண்டுபிடித்த ரசிகர்கள்!
செய்தி முன்னோட்டம்
மகேஷ் நாராயணன் இயக்கத்தில், மலையாளத் திரையுலகின் இரு துருவங்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் பேட்ரியாட் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நயன்தாராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஜனவரி 25) வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. போஸ்டரில் நயன்தாராவின் தீவிரமான முகபாவனை, அவர் ஒரு வலிமையான அரசியல் அல்லது சமூகப் போராட்டக் கதாபாத்திரத்தில் நடிப்பதை உறுதி செய்கிறது.
மோர்ஸ் கோட்
போஸ்டரில் ஒளிந்திருக்கும் மோர்ஸ் கோட் (Morse Code)
இந்த போஸ்டரின் சிறப்பம்சமே அதில் மிக நுணுக்கமாக இடம்பெற்றுள்ள மோர்ஸ் கோட் குறியீடுதான். போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள், அந்தப் புள்ளிகளையும் கோடுகளையும் ஆராய்ந்து அதற்கான விடையைக் கண்டுபிடித்துள்ளனர். அந்த மோர்ஸ் கோட் "April 23" என்ற தேதியைக் குறிக்கிறது. இதன் மூலம், பேட்ரியாட் திரைப்படம் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று வெளியாகும் என்பதைப் படக்குழுவினர் சூசகமாகத் தெரிவித்துள்ளனர்.
சிறப்பம்சங்கள்
பேட்ரியாட் படத்தின் சிறப்பம்சங்கள்
சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டியும் மோகன்லாலும் முழு நீளக் கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் ஃபகத் பாசில், குஞ்சாக்கோ போபன், ரேவதி ஆகியோரும் உள்ளனர். "Dissent is patriotic" (கருத்து வேறுபாடு கொள்வது தேசபக்தி) என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இப்படம், அதிகார வர்க்கத்திற்கும் தனிமனித உரிமைகளுக்கும் இடையிலான மோதலைப் பேசும் அரசியல் த்ரில்லராக இருக்கும் எனத் தெரிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதியே முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
நயன்தாரா
நயன்தாராவின் வருகை
நயன்தாரா ஏற்கனவே ஜவான் திரைப்படத்தில் ஆக்ஷன் அவதாரத்தில் மிரட்டிய நிலையில், மீண்டும் ஒரு தீவிரமான கதைக்களத்தில் மலையாளத்தில் ரீ என்ட்ரி கொடுக்கிறார். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Presenting #Nayantara in #Patriot
— MammoottyKampany (@MKampanyOffl) January 25, 2026
Dissent is patriotic, In a world full of traitors, be a Patriot !!#AntoJoseph #MaheshNarayanan#AntoJosephFilmCompany pic.twitter.com/5C5gxNbHC9