LOADING...
விஜய் vs சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்: ஒரே நாளில் ஒளிபரப்பாகும் இரு ஆடியோ லாஞ்ச்கள்
விஜய், சிவகார்த்திகேயன் படங்களின் ஆடியோ லாஞ்ச்கள் ஒரே நாளில் டிவியில் ஒளிபரப்பாகிறது என தகவல்

விஜய் vs சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்: ஒரே நாளில் ஒளிபரப்பாகும் இரு ஆடியோ லாஞ்ச்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 28, 2025
05:56 pm

செய்தி முன்னோட்டம்

2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையவுள்ளது. நடிகர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் 25வது படமான பராசக்தி ஆகிய இரு படங்களும் நேரடியாக மோதவுள்ளன. திரையரங்க ரிலீஸைத் தாண்டி, தற்போது இந்த இரு படங்களின் இசை வெளியீட்டு விழாக்களும் தொலைக்காட்சியில் ஒரே நாளில் ஒளிபரப்பாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயகன்

ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்

விஜயின் கடைசிப் படம் என்பதால் ஜனநாயகன் படத்திற்கு உலகெங்கிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா நேற்று மலேசியாவில் 90,000 ரசிகர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வு 'மலேசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும்' இடம்பிடித்துள்ளது. இதில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லீ மற்றும் நெல்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

பராசக்தி

பராசக்தி ஆடியோ லாஞ்ச்

சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜனவரி 3 ஆம் தேதி சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷின் 100 வது படம் என்பதால் இதற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

Advertisement

மோதல்

டிவியில் நேரடி மோதல்

வெவ்வேறு தேதிகளில் ஆடியோ வெளியீட்டு விழாக்கள் நடைபெற்றாலும், இவ்விரு ஆடியோ லாஞ்ச்களும் தொலைக்காட்சியில் ஒரே நாளில் ஒளிபரப்பப்பட உள்ளன. ஜனநாயகன் ஜனவரி 4 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக வாய்ப்புள்ளது. பராசக்தி அதே நாளில் அதே நேரத்தில் சன் டிவியில் இசை வெளியீட்டு விழாவை ஒளிபரப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஜனவரி 9 ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படமும், அதற்கு அடுத்த நாள் ஜனவரி 10 ஆம் தேதி பராசக்தி திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. பொங்கல் ரேஸில் ஜெயிக்கப்போவது யார் என்பதைப் பார்க்க ஒட்டுமொத்தத் தமிழகமே ஆவலுடன் காத்திருக்கிறது.

Advertisement