LOADING...
இந்தியக் கடற்படையின் அதிரடி: 'ஆபரேஷன் சங்கல்ப்' மூலம் பாதுகாப்பாக மீட்கப்படும் எரிபொருள் கப்பல்கள்
'ஆபரேஷன் சங்கல்ப்' மூலம் பாதுகாப்பாக மீட்கப்படும் எரிபொருள் கப்பல்கள்

இந்தியக் கடற்படையின் அதிரடி: 'ஆபரேஷன் சங்கல்ப்' மூலம் பாதுகாப்பாக மீட்கப்படும் எரிபொருள் கப்பல்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 17, 2026
04:59 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், இந்திய கடற்படை தனது போர்க்கப்பல்களை நிலைநிறுத்தி, இந்திய வணிக கப்பல்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக நிலவி வந்த முட்டுக்கட்டையை உடைத்து, இந்திய கடற்படையின் பாதுகாப்புடன் முதற்கட்டமாக இரண்டு எல்.பி.ஜி (LPG) ஏற்றி வந்த கப்பல்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளன. அமெரிக்கா தனது நட்பு நாடுகளை போர்கப்பல்களை அனுப்ப கோரி வரும் நிலையில், இந்தியா சைலண்டாக அதை செய்து முடித்து இருப்பது உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது.

வருகை

எரிபொருள் கப்பல்களின் பாதுகாப்பான வருகை

கடந்த இரண்டு வாரங்களாக நிலவி வந்த முட்டுக்கட்டையை உடைத்து, இந்தியக் கடற்படையின் பாதுகாப்புடன் முதற்கட்டமாக இரண்டு எல்.பி.ஜி (LPG) ஏற்றி வந்த கப்பல்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளன: ஷிவாலிக்: கத்தாரிலிருந்து 46,000 மெட்ரிக் டன் எல்.பி.ஜி ஏற்றி வந்த இக்கப்பல், நேற்று மாலை குஜராத்தின் முந்திரா துறைமுகத்தை வந்தடைந்தது. நந்தா தேவி: 46,500 மெட்ரிக் டன் எல்.பி.ஜி ஏற்றி வந்த இக்கப்பல், இன்று, குஜராத்தின் வடினார் துறைமுகத்திற்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தது. ஜக் லாட்கி: ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா துறைமுகத்தில் தாக்குதல் நடந்தபோது மயிரிழையில் தப்பிய இக்கப்பல், தற்போது இந்திய கடற்படையின் பாதுகாப்புடன் முந்திரா துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

ஆபரேஷன் சங்கல்ப்

ஆபரேஷன் சங்கல்ப் பற்றி விவரங்கள்

2019-ஆம் ஆண்டு முதல் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளில் இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய கடற்படை இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு இராணுவக் கூட்டணியில் இணையாமல், இந்தியா தனது 'தன்னாட்சி' கொள்கையின் அடிப்படையில் சுயமாகவே இந்த பாதுகாப்பு பணியை செய்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை தாண்டும்போது, இந்தியக் கடற்படை தனது போர்க்கப்பல்களில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை முழுமையாக செயல்பாட்டில் வைத்து, வணிகக் கப்பல்களை எஸ்கார்ட் செய்து வருகிறது. தற்போது வரை சுமார் 22 இந்திய கப்பல்களும், 600-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகளும் வளைகுடா பகுதியில் தங்கியுள்ளனர். இவர்களையும் பாதுகாப்பாக வெளியேற்ற ஈரானுடன் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை இந்திய வெளியுறவுத்துறை மேற்கொண்டு வருகிறது.

Advertisement