LOADING...
"இன்னைக்கு அனுப்பினால் நாளைக்கு டெலிவரி!": 6 நகரங்களில் '24 விரைவு தபால்' சேவை இன்று தொடக்கம்
6 நகரங்களில் '24 விரைவு தபால்' சேவை இன்று தொடக்கம்

"இன்னைக்கு அனுப்பினால் நாளைக்கு டெலிவரி!": 6 நகரங்களில் '24 விரைவு தபால்' சேவை இன்று தொடக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 17, 2026
09:21 am

செய்தி முன்னோட்டம்

மிக முக்கியமான ஆவணங்கள் மற்றும் தபால்கள் அடுத்த நாளே உரியவரிடம் சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகையில், '24 விரைவு தபால்'(24 Speed ​​Post) மற்றும் '48 விரைவு தபால்' (48 Speed ​​Post) ஆகிய புதிய சேவைகளை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று தொடங்கிவைக்கிறார். முதல்கட்டமாக இந்தியாவின் 6 முக்கிய நகரங்களில் இந்தச் சேவை அமலுக்கு வருகிறது: 1. சென்னை 2. டெல்லி 3. மும்பை 4. கொல்கத்தா 5. பெங்களூரு 6. ஹைதராபாத் தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு இணையாக, தபால்துறையை நவீனமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

இச்சேவையின் சிறப்பம்சங்கள்

'24 விரைவு தபால்' மூலம் 24 மணி நேரத்திற்குள்ளும், '48 விரைவு தபால்' மூலம் 48 மணி நேரத்திற்குள்ளும் தபால்கள் விநியோகிக்கப்படும். தபால்களை பெறுவதற்கு OTP மற்றும் குறுஞ்செய்தி 'எண்ட் டூ எண்ட் என்கிரிப்ட்' வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நேரத்திற்குள் தபால் விநியோகம் செய்யப்படாவிட்டால், செலுத்திய கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கான உத்தரவாதம் வழங்கப்படுகிறது. பெருநிறுவனங்கள் மற்றும் வணிக நுகர்வோர்களுக்காக 'பின்னர் பணம் செலுத்தும் வசதி' மற்றும் API ஒருங்கிணைப்பு போன்ற நவீனத் தொழில்நுட்ப வசதிகளும் இதில் அடங்கும்.

விபரங்கள்

சென்னையில் சேவை கிடைக்கும் பகுதிகள்

சென்னையில் உள்ள பல்வேறு தபால் கோட்டங்களின் கீழ் வரும் 97 தபால் நிலையங்களில் இதற்கான முன்பதிவு மற்றும் விநியோக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை GPO: பாரிமுனை பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம். அண்ணா சாலை: இங்குள்ள பிணைப்பில் மையம் வழியாக வணிக ரீதியான தபால்கள் கையாளப்படும். சென்னை விமான நிலைய பகுதி: புனித தோமையார் மலை (St. Thomas Mount) அருகில் உள்ள தேசிய தபால் பிரிப்பு மையம் இது தவிர, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மயிலாப்பூர், தி.நகர், அடையாறு, அண்ணா நகர் போன்ற முக்கிய பகுதிகளில் உள்ள முதன்மை தபால் நிலையங்களில் இச்சேவை கிடைக்கும்.

Advertisement

தகவல்கள்

முக்கிய தகவல்கள்

1. விநியோக நேரம்: இந்த விரைவு தபால்கள் மதியம் 12:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை விநியோகம் செய்யப்படும். ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் (தேசிய விடுமுறை நாட்களைத் தவிர) விநியோக சேவை உண்டு. 2. கண்காணிப்பு: தபால் அனுப்பியதும் SMS மூலம் தகவல் வரும், மேலும் விநியோகத்தின் போது பாதுகாப்பிற்காக OTP முறை பயன்படுத்தப்படும். 3. அடுத்தக்கட்ட விரிவாக்கம்: தற்போது சென்னை மாநகரப் பகுதிகளில் தொடங்கும் இச்சேவை, அடுத்தடுத்த கட்டங்களில் திருநின்றவூர், பட்டாபிராம் போன்ற புறநகர் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement