இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கலா? இனி கவலையே வேண்டாம்; விண்ணப்பதாரர்களுக்கு உதவ புதிய ஹெல்ப்லைன்
மத்திய பொதுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), 2026 ஆம் ஆண்டிற்கான குடிமைப்பணித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தனது உதவி மைய சேவைகளை விரிவாக்கம் செய்துள்ளது.
'கறை நீங்கிவிட்டது, இனி நிம்மதியாக சாவேன்!' 20 ரூபாய் லஞ்ச வழக்கில் 30 ஆண்டுக்குப் பின் வென்ற காவலரின் சோக முடிவு
அகமதாபாத்தில் வெறும் 20 ரூபாய் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளாகத் தனது நேர்மையை நிரூபிக்கப் போராடி வந்த காவலர் பாபுபாய் பிரஜாபதி, வழக்கில் இருந்து விடுதலையான அடுத்த நாளே இயற்கை எய்திய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (பிப்ரவரி 9) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஆசியாவில் இந்தியாவின் ஆதிக்கம்; மலேசியாவில் பிரதமர் மோடி; செமிகண்டக்டர் முதல் ராணுவ ஒப்பந்தம் வரை.. மலேசிய பயணத்தின் முழு பின்னணி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று பிப்ரவரி 7 மற்றும் 8 (2026) ஆகிய தேதிகளில் மலேசியாவிற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவின் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி; இதன் சிறப்பம்சங்கள் என்ன?
இந்தியா தனது அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட அக்னி-3 பாலிஸ்டிக் ஏவுகணையை நேற்று (பிப்ரவரி 6, 2026) வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
'மிஸ் பண்ணுனா அவ்வளவுதான்.. மறுவாய்ப்பு கிடையாது'; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு எப்போது?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பணிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டெல்லியில் பெண்கள் மாயம்? பீதியை கிளப்ப சினிமா பாணியில் நடந்த 'பெய்டு புரமோஷன்'
டெல்லியில் பெண்கள் மற்றும் சிறுமிகள் அதிக அளவில் மாயமாவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று டெல்லி காவல்துறை விளக்கமளித்துள்ளது.
நடிகர் விஜய்க்கு பின்னடைவு: வருமான வரித்துறை விதித்த ₹1.5 கோடி அபராதம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தாக்கல் செய்த வருமான வரி தொடர்பான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
ரிசல்ட் முக்கியம் இல்ல, பேஸ்மென்ட் தான் முக்கியம்; மாணவர்களுடனான உரையாடலில் பிரதமர் மோடி பகிர்ந்த வெற்றி மந்திரம்
தேர்வு நேரங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுதோறும் நடத்தி வரும் பரிக்ஷா பே சர்ச்சா (Pariksha Pe Charcha) நிகழ்ச்சியின் 9 வது பதிப்பு இன்று (பிப்ரவரி 6) நடைபெற்றது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (பிப்ரவரி 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பதவியேற்பு விழாவால் பற்றி எரியும் மணிப்பூர்; துணை முதலமைச்சர் நியமனத்திற்கு எதிராகக் கடும் வன்முறை
மணிப்பூரில் ஓராண்டு கால குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பிறகு, பிப்ரவரி 4, 2026 அன்று புதிய அமைச்சரவை பதவியேற்றது.
இந்திய விமான நிறுவனங்களின் 377 விமானங்களில் தொழில்நுட்ப குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாம்; ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்களும் அடங்கும்
இந்தியாவில் இயக்கப்படும் விமானங்களில் சுமார் 50 சதவீத விமானங்கள் தொடர்ச்சியான தொழில்நுட்ப குறைபாடுகளை கொண்டுள்ளதாக மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகமே இந்தியாவை வியந்து பார்க்கிறது! மாநிலங்களவையில் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று (பிப்ரவரி 5, 2026) ஆற்றிய உரையில், இந்தியாவின் எதிர்காலம் குறித்த நேர்மறையான மற்றும் நம்பிக்கையூட்டும் பல கருத்துக்களைப் பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்தார்.
இந்திய ரயில்வேயின் துல்லியம் 73% ஆகக் குறைவு: நாடாளுமன்றக் குழுவின் அதிர்ச்சி அறிக்கை
இந்தியாவின் உயிர்நாடியாகக் கருதப்படும் இந்திய ரயில்வே, சமீபகாலமாகப் பயணிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
பறவைக் காய்ச்சல் பீதி; சென்னையில் உயிரிழந்த காகங்களில் H5N1 வைரஸ் உறுதி; கால்நடைத்துறை எச்சரிக்கை
சென்னை அடையாறு பகுதியில் கடந்த ஜனவரி மாதம் மர்மமான முறையில் உயிரிழந்த காகங்களின் உடல்களை ஆய்வு செய்ததில், அவற்றில் H5N1 வகை பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காசியாபாத் சகோதரிகளின் தற்கொலைகளுடன் தொடர்பு படுத்தப்படும் கொரிய 'லவ் கேம்' என்ன?
காசியாபாத்தில் உள்ள மூன்று மைனர் சகோதரிகள் தங்கள் ஒன்பதாவது மாடி அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து குதித்து இறந்ததாக கூறப்படுகிறது.
மணிப்பூரில் மீண்டும் மக்களாட்சி; ஓராண்டுக்கு பின் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து
மணிப்பூர் மாநிலத்தில் நிலவிய வன்முறை மற்றும் அரசியலமைப்பு நெருக்கடி காரணமாக 2025 பிப்ரவரி மாதம் அமல்படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி, சரியாக ஒரு ஆண்டிற்கு பிறகு இன்று முடிவுக்கு வந்துள்ளது.
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐ விசாரணையில் அம்பலமான போலீஸ் கொடூரம்
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல் மரணம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று மிகக்கடுமையான கருத்துகளை பதிவு செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் ஜெய்ஷ் முன்னணி தளபதி உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், இரண்டு ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அதிமுகவின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு: எடப்பாடி பழனிசாமியின் முக்கிய அறிவிப்புகள்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிட்டுள்ளார்.
மொபைல் கேம் போதையா? காசியாபாத்தில் 9-வது மாடியில் இருந்து குதித்து 3 சகோதரிகள் தற்கொலை
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் 'பாரத் சிட்டி' குடியிருப்பில் திங்கள்கிழமை நள்ளிரவு 16, 14 மற்றும் 12 வயதுடைய மூன்று சிறுமிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதி விபத்து; நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.
மேற்கு வங்க SIR வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாட முதலமைச்சர் மம்தா பானர்ஜி விருப்பம்
மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (பிப்ரவரி 5) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தத்தில் விவசாயம், பால்வளம் பாதுகாக்கப்பட்டுள்ளன: பியூஷ் கோயல்
அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் விவசாயம் மற்றும் பால் துறைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
'பொறுமைக்கான விளைவு': இந்தியா-அமெரிக்க ஒப்பந்தத்திற்கு பிறகு பிரதமர் NDA நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நாடாளுமன்ற உறுப்பினர்களை (MP) சந்தித்து உரையாற்றினார்.
முன்னாள் ராணுவ தளபதியின் புத்தகம் குறித்த சர்ச்சைக்கு பின் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது; என்ன சர்ச்சை?
முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணேவின் நினைவுக்குறிப்புகளை (Memoir) ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டியது தொடர்பாக தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று நாடாளுமன்றம் கூடுகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (பிப்ரவரி 4) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பங்களாதேஷத்தில் இருந்து வரும் மீன்களை சாப்பிடாதீங்க! மேகாலயாவின் 2 மாவட்டங்களில் அதிரடி தடை!
மேகாலயா மாநிலத்தின் கிழக்கு காசி ஹில்ஸ் மற்றும் தென்மேற்கு காசி ஹில்ஸ் ஆகிய இரண்டு மாவட்டங்களில், பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கு மாவட்ட நிர்வாகம் அதிரடி தடை விதித்துள்ளது.
தொழிலதிபர் சி.ஜே. ராய் 9 பக்க தற்கொலை கடிதமும், பின்னணியும்; IT அதிகாரிகள் காரணமா?
பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், கான்ஃபிடன்ட் குழுமத்தின் தலைவருமான சி.ஜே. ராய் (57), கடந்த வெள்ளிக்கிழமை தனது அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
36 மணி நேரத்தில் 12 குழந்தைகள் கடத்தப்பட்டார்களா? மும்பையில் பரவும் பீதி; போலீஸ் எச்சரிக்கை
மும்பையில் கடந்த 36 மணி நேரத்தில் 12 குழந்தைகள் மாயமானதாகவும், நகரம் முழுவதும் கடத்தல் கும்பல் நடமாடுவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (பிப்ரவரி 3) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
"கோட்டையை கைப்பற்றுவோம்": 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த TVKதொண்டர்களுக்கு விஜய் கட்டளை
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், இன்று தனது அரசியல் பயணத்தின் மூன்றாவது ஆண்டில் நுழைகிறது.
தமிழகத்திற்கு பட்ஜெட் ஜாக்பாட்: அதிவேக ரயில் முதல் ஆதிச்சநல்லூர் வரை
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2026-27-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
போர்களுக்கு இனி இடமில்லை; அரபு நாடுகளின் பிரதிநிதிகளிடம் பிரதமர் மோடி உறுதி
புதுடெல்லியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற 2வது இந்தியா - அரபு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் (IAFMM), 22 அரபு லீக் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
விடுமுறை நாளில் பட்ஜெட்! 1999இல் என்ன நடந்தது? பட்ஜெட் நேரமும் தேதியும் மாறிய சுவாரஸ்ய வரலாறு!
இந்திய நிதித்துறையின் வரலாற்றில் முதன்முறையாக, மத்திய பட்ஜெட் ஒரு ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) அன்று தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: IMD அறிவிப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் நிலவி வரும் மாறுபட்ட காற்று திசை காரணமாக, அடுத்த ஆறு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விவாத மேடையில் சரிந்த ஹெச். ராஜா; அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிக்கை
தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா, சென்னையில் நடைபெற்ற ஊடக விவாத நிகழ்ச்சியின் போது திடீரென மயங்கி விழுந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர அரசியலில் புதிய வரலாறு; முதல் பெண் துணை முதலமைச்சராக சுனேத்ரா பவார் பதவியேற்றார்; கண்ணீரில் தொண்டர்கள்
மகாராஷ்டிர மாநில அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாக, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) தலைவரும், மறைந்த முன்னாள் துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மனைவியுமான சுனேத்ரா பவார், இன்று (ஜனவரி 31) அம்மாநிலத்தின் புதிய துணை முதலமைச்சராகப் பதவியேற்றார்.
பத்தாம் வகுப்பு முடித்தவரா நீங்க? தேர்வே இல்லாமல் இந்திய அஞ்சல் துறையில் 28,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்; விண்ணப்பிக்கும் முறை
இந்திய அஞ்சல் துறை, நாடு முழுவதும் காலியாக உள்ள 28,740 கிராமின் டக் சேவக் (GDS) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.