LOADING...
விடுமுறை நாளில் பட்ஜெட்! 1999இல் என்ன நடந்தது? பட்ஜெட் நேரமும் தேதியும் மாறிய சுவாரஸ்ய வரலாறு!
இந்திய பட்ஜெட் 2026

விடுமுறை நாளில் பட்ஜெட்! 1999இல் என்ன நடந்தது? பட்ஜெட் நேரமும் தேதியும் மாறிய சுவாரஸ்ய வரலாறு!

எழுதியவர் Sekar Chinnappan
Feb 01, 2026
10:18 am

செய்தி முன்னோட்டம்

இந்திய நிதித்துறையின் வரலாற்றில் முதன்முறையாக, மத்திய பட்ஜெட் ஒரு ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) அன்று தாக்கல் செய்யப்படுகிறது. வழக்கமாக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் நாடாளுமன்றம் இயங்காது என்றாலும், நாட்டின் மிக முக்கிய நிதி நிகழ்வான பட்ஜெட்டிற்காக இன்று காலை 11 மணிக்கு லோக்சபா கூடுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார்.

1999

1999 பட்ஜெட்டும் மாற்றமும்

இதற்கு முன்பு 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வந்தது. ஆனால், அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில், நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பட்ஜெட்டை ஒரு நாள் முன்னதாகவே, அதாவது பிப்ரவரி 27 (சனிக்கிழமை) அன்று தாக்கல் செய்தார். எனவே, ஞாயிற்றுக்கிழமை அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

நேர மாற்றம்

பட்ஜெட் நேரம் மற்றும் தேதி மாறிய வரலாறு

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முறையில் பல ஆண்டுகளாகப் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன: மாலை 5 மணி முதல் காலை 11 மணி வரை: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், லண்டன் நேரத்திற்கு ஏற்ப இந்தியாவில் மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அடிமைத்தன முறையை 1999இல் மாற்றிய யஷ்வந்த் சின்ஹா, காலை 11 மணிக்கு பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதுவே இப்போது வரை தொடர்கிறது. பிப்ரவரி 1 மாற்றம்: 2017ஆம் ஆண்டு வரை பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில்தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. புதிய நிதியாண்டு தொடங்கும் ஏப்ரல் 1க்குள் விவாதங்களை முடித்து நடைமுறைப்படுத்த வசதியாக, 2017 முதல் பிப்ரவரி 1 ஆம் தேதியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

Advertisement

ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட்டினால் ஏற்படும் விளைவுகள்

ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் சில முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றன: நாடாளுமன்றம் கூடுதல்: விடுமுறை நாளாக இருந்தாலும், பட்ஜெட் உரைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவைக்கு வருவார்கள். பங்குச்சந்தை சிறப்பு அமர்வு: பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தை இயங்காது. ஆனால், பட்ஜெட் முக்கியத்துவம் கருதி இன்று சிறப்பு வர்த்தக அமர்வுகள் நடத்தப்படுகிறது. ஆய்வு செய்ய கூடுதல் நேரம்: முதலீட்டாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் பட்ஜெட் அறிவிப்புகளை ஆழமாக ஆய்வு செய்து, திங்கட்கிழமை சந்தை தொடங்கும் போது சரியான முடிவுகளை எடுக்க இது கூடுதல் கால அவகாசத்தை வழங்குகிறது.

Advertisement