இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
மாணவர்களுக்கும் ஆதார் போல ஒரு கார்டு; கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் APAAR ID; நன்மைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை
மத்திய கல்வி அமைச்சகம் 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய APAAR (Automated Permanent Academic Account Registry) என்பது மாணவர்களுக்கான ஒரு பிரத்யேக டிஜிட்டல் அடையாள அட்டையாகும்.
10 மணிக்கு மேல் அனுமதி இல்லை; பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது சிபிஎஸ்இ
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்குகின்றன.
அடிமைத்தன அடையாளங்களுக்கு குட்பை; ராஜ்பத் முதல் முகலாயத் தோட்டம் வரை; மோடி ஆட்சியில் உருமாறிய இந்தியாவின் முக்கிய இடங்கள்
பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு பொறுப்பேற்றது முதல், இந்தியாவின் அடிமைத்தன அடையாளங்களை அகற்றி, தேசத்தின் கலாச்சாரம் மற்றும் வீரத்தைப் பறைசாற்றும் நோக்கில் ஒரு மிகப்பெரிய பெயர் மாற்றத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி வாக்கில் அதே பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தின் புதிய பிரதமருக்கு மோடி போட்ட போன்; தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து மழையும், இந்தியா கொடுத்த வாக்குறுதியும்
வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவரும் வங்கதேசத்தின் அடுத்த பிரதமருமான தாரிக் ரஹ்மானை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
தவெக மாநாட்டில் விபரீதம்; விஜய் பங்கேற்ற சேலம் கூட்டத்தில் ஒருவர் பலி; காரணம் என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) சேலத்தில் நடைபெற்றது.
சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டின் தரவரிசையில் இந்தியா முன்னேற்றம்; எத்தனையாவது இடம் தெரியுமா?
ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியாவின் பாஸ்போர்ட் கடந்த ஆண்டு 85வது இடத்திலிருந்து 75வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
"வோட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள்...இது SOP": சேலத்தில் முதல்வர் ஸ்டாலினை சீண்டிய விஜய்
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சேலத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அதிரடியான அரசியல் உரையை நிகழ்த்தினார்.
தெற்கு பிளாக்கிற்கு விடை, இனி 'சேவா தீர்த்' தான்! பிரதமர் அலுவலகத்தின் புதிய முகவரி இதுதான்
சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக, இந்திய பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகம் (PMO) பிரிட்டிஷ் காலத்து தெற்கு பிளாக்கிலிருந்து, அதிநவீன வசதிகள் கொண்ட 'சேவா தீர்த்' வளாகத்திற்கு இன்று மாற்றப்பட்டது.
வங்கதேசத்தில் தாரிக் ரஹ்மான் 'ஆட்சி': வாழ்த்துச் சொன்ன பிரதமர் மோடி! இந்தியா-வங்கதேச உறவில் புதிய திருப்பம்?
பங்களாதேஷில் நடைபெற்று முடிந்த 13-வது நாடாளுமன்ற தேர்தலில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (BNP) பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது.
பெண்களுக்கு ரூ. 5,000 'மெகா' கிப்ட்! அதிரடியாக ரூ. 2,000-ஆக உயர்கிறது உரிமைத் தொகை
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.31 கோடி பெண்களின் வங்கித் கணக்கில் இன்று காலை தலா ரூ. 5,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு பயம் காட்டும் S-400! ரூ.10,000 கோடியில் ஏவுகணைகளை அள்ளும் இந்தியா
இந்தியாவின் எல்லை பாதுகாப்பு மற்றும் வான்வழி தற்காப்பு திறனை மேம்படுத்தும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து 288 S-400 ஏவுகணைகளை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் பச்சை கொடி காட்டியுள்ளது.
மல்லையாவிற்கு முட்டுக்கட்டை போட்ட ஹைகோர்ட்: "இந்தியா வாங்க.. அப்புறம் பேசலாம்!"
லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, தன்னை 'பொருளாதாரக் குற்றவாளி' (Fugitive Economic Offender) என அறிவித்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
ராகுல் காந்தியின் MP பதவியை நீக்க கோரி தீர்மானம் கொண்டுவந்த பாஜக MP
மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்.பி. நிஷிகாந்த் துபே ஒரு முக்கிய தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.
ஏர் இந்தியா விபத்து, தொழில்நுட்ப கோளாறு அல்ல; வேண்டுமென்றே செய்யப்பட்டது: அறிக்கை
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தை விசாரித்த புலனாய்வாளர்கள், இந்த சம்பவம் "வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல்" என்றும், தொழில்நுட்ப கோளாறு அல்ல என்றும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை கோஸ்டல் ரோட்டில் வினோத முயற்சி; மியூசிக்கல் ஸ்டிரிப்ஸ் மூலம் பாடலை ஒலிக்க செய்யும் திட்டம் தொடக்கம்
மும்பை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க கொண்டுவரப்பட்ட 'மும்பை கடலோர சாலை திட்டத்தில்' (MCRP), வாகன ஓட்டிகளை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரு புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ராணுவ தளபதி புத்தக கசிவு 'திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கை': டெல்லி போலீசார்
முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவனேவின் நினைவு குறிப்பான ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி கசிவு தொடர்பாக டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு பல நாடுகள் விசாரணையை தொடங்கியுள்ளது.
இன்று இந்தியா முழுவதும் 'பாரத் பந்த்': ஸ்தம்பிக்கிறதா போக்குவரத்து? வங்கிகள், பள்ளிகள் நிலை என்ன?
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த இந்தியா - அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மற்றும் புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று, பிப்ரவரி 12, நாடு தழுவிய அளவில் 'பாரத் பந்த்' நடைபெறுகிறது.
"நாங்கள் சேவகர்கள் அல்ல.. சமமாக நடத்துங்கள்!": டிரம்ப்-க்கு ராகுல் காந்தி காட்டமான பதிலடி
நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அண்மையில் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இனி எல்லா அரசு விழாக்களிலும் 'வந்தே மாதரம்' ஒலிக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு
இந்தியாவின் தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடப்படுவதற்கான புதிய மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
"எதிரிகளல்ல, நாம் கூட்டாளிகள்!": இந்தியாவிடம் சமரசம் பேசும் சீனா
இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவில் நிலவி வரும் கசப்புணர்வை குறைத்து, அதை சீரமைக்கும் நோக்கில் இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையிலான 'வியூக ரீதியிலான பேச்சுவார்த்தை' செவ்வாயன்று புது டெல்லியில் நடைபெற்றது.
எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையை சுற்றி வளைக்கும் வீடியோவை ரிஜிஜு பகிர்ந்துள்ளார்
நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, பிப்ரவரி 4 ஆம் தேதி மக்களவையில் நடந்த மோதலின் வீடியோவை வெளியிட்டு, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் "மிகவும் இழிவான நடத்தை" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் புலனுணர்வு குறியீடு 2025: 182 உலக நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?
ஊழல் உணர்வுகள் குறியீடு (CPI) 2025 இல் 182 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இந்தியா 91வது இடத்தைப் பிடித்துள்ளது.
மணிப்பூரில் தொடர்ந்து 3வது நாளாக துப்பாக்கிச் சூடு, தீ வைப்பு சம்பவங்கள் பதிவு; என்ன காரணம்?
மணிப்பூர் லிட்டன் பகுதியில் செவ்வாய்க்கிழமை மூன்றாவது நாளாக பதட்டமான சூழ்நிலை நிலவியதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூர் அரசு உக்ருல் மாவட்டத்தில் மொபைல், பிராட்பேண்ட், VPN மற்றும் VSAT இணைப்புகள் உள்ளிட்ட இணைய சேவைகளை ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது.
12ஆம் வகுப்பு மதிப்பீடுகளுக்கான புதிய On-Screen Marking முறையை CBSE அறிமுகப்படுத்தியுள்ளது
பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்கும் 12 ஆம் வகுப்பு போர்டு எக்ஸாம்களுக்கு On-Screen Marking (OSM) அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) அறிவித்துள்ளது.
"ஆஃப் பாயில் வேண்டவே வேண்டாம்!": பறவை காய்ச்சல் எதிரொலியாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய எச்சரிக்கை
சென்னை அடையாறு பகுதியில் உயிரிழந்த காகங்களை ஆய்வு செய்ததில், அவற்றுக்கு 'H5N1' வகை பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
"நரவானே பொய் சொல்வாரா? பென்குயின் பொய் சொல்கிறதா?": புத்தக சர்ச்சை குறித்து ராகுல் காந்தி
முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய வெளியிடப்படாத புத்தகம் ஒன்று விநியோகிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்குக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 'தேசிய நலன்களால்' வழிநடத்தப்படுகிறது: வெளியுறவு செயலாளர்
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிகள் "தேசிய நலன்களால்" வழிநடத்தப்படும் என்று வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி வாய்ப்பு! இறுதிப் பட்டியல் எப்போது?
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக வழங்கப்பட்ட கூடுதல் கால அவகாசம் இன்றுடன் (பிப்ரவரி 10) நிறைவடைகிறது.
பாமக தலைமை பதவி யாருக்கு? டெல்லி உயர் நீதிமன்றத்தில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள வழக்கு!
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைமை பதவி மற்றும் நிர்வாகக் குழு அங்கீகாரம் தொடர்பாக நிலவி வரும் சட்ட போராட்டங்கள் தற்போது இறுதி முடிவை எட்டியுள்ளன.
குரூப் 2/2A தேர்வர்களுக்கு குட் நியூஸ்; மார்ச் 15 இல் மீண்டும் தேர்வு; டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிப்ரவரி 8 ஆம் தேதி தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ (Group II & IIA) முதன்மைத் தேர்வுகள் (தாள்-I மற்றும் தாள்-II), வரும் மார்ச் 15, 2026 அன்று நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளில் H-1B விசா கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கப்படவில்லை: மத்திய அமைச்சர்
அமெரிக்காவுடனான தனது சமீபத்திய கலந்துரையாடல்களின் போது H-1B விசா கட்டுப்பாடுகள் குறித்த பிரச்சினை விவாதிக்கப்படவில்லை என்பதை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒரு இரவு தங்க ரூ. 32 லட்சமா? டெல்லியில் மிரட்டும் ஹோட்டல் கட்டணங்கள்; என்ன காரணம்?
டெல்லியில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள 'AI Impact Summit' மாநாட்டை முன்னிட்டு, தலைநகரில் உள்ள சொகுசு ஹோட்டல்களின் கட்டணம் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
பரிக்ஷா பே சர்ச்சா 2026: குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்; பெற்றோர்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள்
அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற பரிக்ஷா பே சர்ச்சா 2026 நிகழ்வில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.
பறவைக் காய்ச்சல் பீதி; நாமக்கல் கோழிப் பண்ணைகளில் இரட்டிப்பாக்கப்பட்ட பாதுகாப்பு
தமிழகத்தின் சில பகுதிகளில் பறவைக் காய்ச்சல் அறிகுறி மற்றும் பறவைகள் உயிரிழப்பு பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து, தமிழக அரசு மாநிலம் தழுவிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (பிப்ரவரி 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
முடிவுக்கு வருகிறதா மோதல்? இந்தியா -கனடா இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்
கடந்த 2023-ம் ஆண்டு முதல் நீடித்து வந்த தூதரக மோதல்களை கடந்து, இந்தியா மற்றும் கனடா நாடுகள் தங்களது உறவை சீரமைக்கும் நோக்கில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
இளங்கலை நீட் தேர்வு 2026: விண்ணப்பப் பதிவு தொடக்கம்; தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய மாற்றங்கள்
தேசிய தேர்வு முகமை (என்டிஏ), 2026 ஆம் ஆண்டிற்கான இளங்கலை நீட் தேர்வு விண்ணப்பப் பதிவைத் தொடங்கியுள்ளது.
நாளை காலையில் வெளியே போறீங்களா? தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களுக்குப் பனிமூட்ட எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை முழுமையாக நிறைவடைந்து, வறண்ட வானிலை நிலவி வருகிறது.
ஹால் டிக்கெட் இருந்தும் இடமில்லை; குளறுபடியால் குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி; மறுதேர்வு எப்போது?
தமிழகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 8, 2026) நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.