LOADING...
மும்பை கோஸ்டல் ரோட்டில் வினோத முயற்சி; மியூசிக்கல் ஸ்டிரிப்ஸ் மூலம் பாடலை ஒலிக்க செய்யும் திட்டம் தொடக்கம்
வாகன ஓட்டிகளை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரு புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது (Pc: Indian express)

மும்பை கோஸ்டல் ரோட்டில் வினோத முயற்சி; மியூசிக்கல் ஸ்டிரிப்ஸ் மூலம் பாடலை ஒலிக்க செய்யும் திட்டம் தொடக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 12, 2026
12:54 pm

செய்தி முன்னோட்டம்

மும்பை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க கொண்டுவரப்பட்ட 'மும்பை கடலோர சாலை திட்டத்தில்' (MCRP), வாகன ஓட்டிகளை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரு புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் 'மியூசிக்கல் ரோடு' நேற்று மும்பையில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.

செயல்பாடு

எப்படி செயல்படுகிறது?

நாரிமன் பாயிண்ட் முதல் வொர்லி நோக்கி செல்லும் வடக்கு நோக்கிய பாதையில், சுரங்கப்பாதையிலிருந்து வெளியே வந்தவுடன் சாலையில் சிறப்பு இசை பட்டைகள் (Musical Strips) பொருத்தப்பட்டுள்ளன. வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் இந்த பட்டைகளின் மீது செல்லும்போது, உராய்வினால் ஏற்படும் அதிர்வெண் மூலமாக 2008-ல் ஆஸ்கார் விருது வென்ற 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் 'ஜெய் ஹோ' பாடல் ஒலிக்கிறது. வாகனங்களுக்குள்ளேயே இந்த பாடலை ஓட்டுநர்கள் கேட்க முடியும். "மக்களிடையே தேசபக்தி உணர்வை ஊட்டுவதற்காகவும், தேசத்திற்கு அர்ப்பணிக்கும் விதமாகவும் 'ஜெய் ஹோ' பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது" என நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உலகிலேயே இதுபோன்ற மியூசிக்கல் ரோடு அமைக்கப்பட்டுள்ள ஐந்தாவது நகரம் மும்பை என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement