LOADING...
பத்தாம் வகுப்பு முடித்தவரா நீங்க? தேர்வே இல்லாமல் இந்திய அஞ்சல் துறையில் 28,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்; விண்ணப்பிக்கும் முறை
இந்தியா போஸ்டில் 28,740 GDS பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பத்தாம் வகுப்பு முடித்தவரா நீங்க? தேர்வே இல்லாமல் இந்திய அஞ்சல் துறையில் 28,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்; விண்ணப்பிக்கும் முறை

எழுதியவர் Sekar Chinnappan
Jan 31, 2026
05:18 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய அஞ்சல் துறை, நாடு முழுவதும் காலியாக உள்ள 28,740 கிராமின் டக் சேவக் (GDS) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று (ஜனவரி 31) முதல் தொடங்கியுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முக்கியத் தேதிகள்: விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: ஜனவரி 31, 2026 விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 14, 2026 கட்டணம் செலுத்த கடைசி நாள்: பிப்ரவரி 16, 2026 திருத்தம் செய்வதற்கான கால அவகாசம்: பிப்ரவரி 18 மற்றும் 19, 2026

தகுதி

தகுதி மற்றும் ஊதியம்

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம், உள்ளூர் மொழி (தமிழ்நாடு எனில் தமிழ்) மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களை முக்கியப் பாடங்களாகப் படித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு). ஊதியம்: மாதம் ரூ. 10,000 முதல் ரூ. 24,470 வரை (பணியைப் பொறுத்து மாறுபடும்). பொது மற்றும் ஓபிசி பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பம்

விண்ணப்பிக்கும் முறை

முதலில் indiapostgdsonline.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். முகப்புப் பக்கத்தில் உள்ள 'Registration' லிங்க்கைக் கிளிக் செய்து உங்கள் அடிப்படை விவரங்களை உள்ளிடவும். பதிவு செய்த பிறகு, விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும். தேவையான ஆவணங்களை (புகைப்படம், கையொப்பம் போன்றவை) சரியான அளவில் பதிவேற்றவும். கட்டணம் செலுத்த வேண்டிய பிரிவினர் ஆன்லைன் மூலம் கட்டணத்தைச் செலுத்தவும். இறுதியாக 'Submit' பட்டனை அழுத்தவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

Advertisement