LOADING...
உலக நாடுகளை மிரட்டும் இந்தியாவின் 6th Gen போர் விமானத் திட்டம்! ஏஐ மற்றும் லேசர் ஆயுதங்களுடன் உருவாகும் மெகா பிளான்
இந்திய விமானப்படையின் 6ஆம் தலைமுறை பாய்ச்சல்

உலக நாடுகளை மிரட்டும் இந்தியாவின் 6th Gen போர் விமானத் திட்டம்! ஏஐ மற்றும் லேசர் ஆயுதங்களுடன் உருவாகும் மெகா பிளான்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 19, 2026
11:35 am

செய்தி முன்னோட்டம்

உலகின் முன்னணி வல்லரசு நாடுகளுக்கு இணையாக, இந்தியாவும் 6 ஆம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்குவதற்கான முதற்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளது. இதற்கான விரிவான திட்டத்தை உருவாக்குமாறு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு, நாடாளுமன்றப் பாதுகாப்பு நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

சிறப்பம்சங்கள்

6 ஆம் தலைமுறை விமானங்களின் சிறப்பம்சங்கள் என்ன?

தற்போது புழக்கத்தில் உள்ள 5 ஆம் தலைமுறை விமானங்களை விட, இவை தொழில்நுட்ப ரீதியாகப் பல மடங்கு முன்னேறியவை. போர் சூழலில் முடிவுகளை எடுக்கவும், விமானிக்கு உதவவும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் இதில் இருக்கும். தேவைப்பட்டால் இந்த விமானங்களை ஒரு பைலட் இல்லாமலேயே தரையில் இருந்து இயக்க முடியும். எதிரி ஏவுகணைகளை வானிலேயே பொசுக்கும் அதிநவீன லேசர் மற்றும் எலக்ட்ரிக் ஆயுதங்கள் இதில் பொருத்தப்படும். எதிரி நாட்டு ரேடார்களில் சிக்காமல் மிக ரகசியமாகச் சென்று தாக்கும் திறன் கொண்டது.

ஒப்பீடு

உலக நாடுகளுடன் ஒரு ஒப்பீடு

தற்போது அமெரிக்கா (F-22, F-35), சீனா (J-20, J-35A) மற்றும் ரஷ்யா (Su-57) ஆகிய நாடுகள் மட்டுமே 5 ஆம் தலைமுறை விமானங்களை இயக்கி வருகின்றன. இந்தியா ஏற்கனவே தனது 5 ஆம் தலைமுறை விமானமான AMCA (Advanced Medium Combat Aircraft) திட்டத்தில் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், 6 ஆம் தலைமுறைத் திட்டத்திலும் இறங்குவது இந்தியாவை வான்வெளிப் பாதுகாப்பில் ஒரு சூப்பர் பவராக மாற்றும்.

Advertisement

போட்டி

போட்டியில் உள்ள மற்ற நாடுகள்

6 ஆம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க தற்போது பின்வரும் ஒரு சில நாடுகள் மட்டுமே முயன்று வருகின்றன: அமெரிக்கா: NGAD (Next Generation Air Dominance) திட்டம். Tempest Project: இங்கிலாந்து, இத்தாலி மற்றும் ஜப்பான் கூட்டணி. FCAS: பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் கூட்டணி. சீனா: தனது 6 ஆம் தலைமுறை தொழில்நுட்பங்களை ரகசியமாக மேம்படுத்தி வருகிறது.

Advertisement

இந்தியா

இந்தியாவின் எதிர்காலத் திட்டம்

பாதுகாப்பு நிலைக்குழுவின் இந்தப் பரிந்துரை, இந்தியாவின் 'சுயசார்பு இந்தியா' (Atmanirbhar Bharat) கொள்கைக்குப் பெரும் வலுசேர்க்கும். 2030களின் இறுதியில் அல்லது 2040களின் தொடக்கத்தில் இந்த 6 ஆம் தலைமுறை விமானங்கள் இந்திய விமானப்படையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வெறும் போர் விமானம் மட்டுமல்ல, இந்தியப் பாதுகாப்புத் துறையின் தொழில்நுட்ப வலிமைக்கு ஒரு சான்றாக அமையும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Advertisement