LOADING...
வோட்டர் லிஸ்ட்ல பேர் இல்லையா? வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 27 கடைசி வாய்ப்பு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 27 கடைசி வாய்ப்பு

வோட்டர் லிஸ்ட்ல பேர் இல்லையா? வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 27 கடைசி வாய்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 18, 2026
10:13 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதை உறுதி செய்யும் வகையில், விடுபட்டவர்கள் பெயர் சேர்க்க மார்ச் 27-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்த, ஆனால் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 23-ல் வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலின்படி, தமிழகத்தில் தற்போது 5,69,17,979 வாக்காளர்கள் உள்ளனர். இதில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை [voters.eci.gov.in](https://voters.eci.gov.in) என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

வழிகாட்டுதல்

விண்ணப்பிக்கும் முறை

வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளுக்கு பத்து நாட்களுக்கு முன்பு வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால், மார்ச் 27-ஆம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாகும். 1. ஆன்லைன் வழி: [voters.eci.gov.in](https://voters.eci.gov.in) இணையதளத்தில் மொபைல் எண் மூலம் லாக்-இன் செய்து, படிவம் 6-ஐ பூர்த்தி செய்து ஆவணங்களை அப்லோட் செய்யலாம். 2. நேரடி வழி: உங்கள் தொகுதியில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்திற்கு சென்று உரிய ஆவணங்களுடன் படிவத்தைச் சமர்ப்பிக்கலாம். குறிப்பு: புதிய வாக்காளர் சேர்க்கைக்கு படிவம் 6-உம், முகவரி மாற்றம்/திருத்தம் செய்ய படிவம் 8-உம் நிரப்ப வேண்டும்.

Advertisement