LOADING...
ராஜ்யசபா தேர்தல் முடிவுகள் 2026: பீகாரில் NDA முழு வெற்றி; ஒடிசாவில் 3 இடங்களை வென்றது
பீகாரில் உள்ள 5 இடங்களையும் முழுமையாக கைப்பற்றியது NDA

ராஜ்யசபா தேர்தல் முடிவுகள் 2026: பீகாரில் NDA முழு வெற்றி; ஒடிசாவில் 3 இடங்களை வென்றது

எழுதியவர் Venkatalakshmi V
Mar 17, 2026
08:08 am

செய்தி முன்னோட்டம்

பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தல்களில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தனது பலத்தை நிரூபித்துள்ளது. பீகாரில் உள்ள 5 இடங்களையும் முழுமையாக கைப்பற்றியதுடன், ஒடிசாவிலும் எதிர்க்கட்சிகளின் 'கிராஸ் வோட்டிங்' உதவியுடன் கூடுதல் இடத்தை பெற்றுள்ளது. பீகாரில் காலியாக இருந்த 5 இடங்களுக்கும் 6 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் தேர்தல் அவசியமானது. இதில் NDA சார்பில் போட்டியிட்ட 5 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்- பீகார் முதல்வர் நிதிஷ் குமார் (JDU), பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன், மத்திய அமைச்சர் ராம்நாத் தாக்கூர், உபேந்திர குஷ்வாகா மற்றும் சிவேஷ் குமார் (பாஜக).

பின்னடைவு

எதிர்க்கட்சி பின்னடைவு

ஆர்ஜேடி (RJD) வேட்பாளர் ஏ.டி.சிங் தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சியின் 3 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் ஆர்ஜேடியின் ஒரு எம்.எல்.ஏ என மொத்தம் 4 பேர் வாக்களிக்க வராதது எதிர்க்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. சிவேஷ் குமாருக்கும் ஏ.டி.சிங்கிற்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், இரண்டாம் விருப்பு வாக்குகள் அடிப்படையில் சிவேஷ் குமார் வெற்றி பெற்றார்.

ஒடிசா

ஒடிசா: பாஜகவின் 'மாஸ்டர் பிளான்' வெற்றி

ஒடிசாவில் காலியாக இருந்த 4 இடங்களில் பாஜக 3 இடங்களை கைப்பற்றி அசத்தியுள்ளது. ஒடிசா மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமல் மற்றும் சுஜித் குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். பாஜக ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய், பிஜேடி (BJD) மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் சுமார் 11 கிராஸ் வோட்டிங் வாக்குகளை பெற்று அதிரடி வெற்றி பெற்றார். பிஜேடி சார்பில் சந்த்ருப்த் மிஸ்ரா மட்டும் வெற்றி பெற்றார். மற்றொரு பிஜேடி ஆதரவு வேட்பாளரான தத்தேஸ்வர் ஹோதா தோல்வியடைந்தார்.

Advertisement