உலக வரைபடத்தை மாற்றிய டொனால்ட் ட்ரம்ப்! நேட்டோ நாடுகளுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை!
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் கிரீன்லாந்து தீவை அமெரிக்காவின் ஒரு பகுதியாக காட்டும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் ஒன்றில், "கிரீன்லாந்து - அமெரிக்காவின் யூனியன் பிரதேசம், தொடக்கம்: 2026" (US Territory Est. 2026) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கனடா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளையும் அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் காட்டும் வகையில் அந்தப் புகைப்படங்கள் உள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Trump shares an image on Truth Social showing Canada, Greenland, and Venezuela as part of the United States. pic.twitter.com/QR6NANDUqC
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) January 20, 2026
கிரீன்லாந்து
கிரீன்லாந்தை ஒப்படைக்குமாறு டென்மார்க்கை வலியுறுத்தும் டிரம்ப்
நேட்டோ அமைப்பில் உள்ள ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் தான் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ள ட்ரம்ப், கிரீன்லாந்தை விற்க டென்மார்க் ஒப்பு கொள்ளாவிட்டால், அந்த நாடு மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் மீது கடும் இறக்குமதி வரிகள் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். வரும் பிப்ரவரி 1, 2026 முதல் 10% வரியும், ஜூன் 1 முதல் 25%-ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கிரீன்லாந்து பகுதியில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்த முயற்சிப்பதால், அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு இந்தத் தீவு மிகவும் அவசியம் என்பது ட்ரம்ப்பின் வாதம். இதற்கிடையில், கிரீன்லாந்தில் உள்ள பிட்ஃபுஃபிக் விண்வெளி தளத்தில் அமெரிக்கா தனது விமானப்படையின் NORAD ரக விமானங்களை நிலைநிறுத்த தொடங்கியுள்ளது.