அமெரிக்க அதிபராக முதலாண்டு நிறைவு: தனது சாதனைகளை விளக்கி டொனால்ட் ட்ரம்ப் தம்பட்டம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபராக தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் ஆண்டை நிறைவு செய்துள்ள டொனால்ட் ட்ரம்ப், சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த ஒரு அதிரடியான செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். "365 நாட்களில் 365 வெற்றிகள்" (365 Wins in 365 Days) என்ற தலைப்பிலான ஒரு பெரிய கோப்பை உயர்த்திப் பிடித்த அவர், தனது நிர்வாகத்தின் சாதனைகளை பட்டியலிட்டார். இந்த சந்திப்பின் போது, சட்டவிரோதமாக குடியேறியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் புகைப்படங்களை காண்பித்த ட்ரம்ப், தனது ஓராண்டு காலத்தில் சுமார் 26 லட்சம் சட்டவிரோதக் குடியேறிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பொருளாதார ரீதியாக பெட்ரோல் விலையை குறைத்தது, நடுத்தர வர்க்கத்தினருக்கான வரிச் சலுகைகள் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியது போன்றவற்றை தனது முக்கிய சாதனைகளாக குறிப்பிட்டார்.
டாவோஸ்
உலக பொருளாதார மன்ற கூட்டத்திற்கு செல்லும் டிரம்ப்
வணிக ரீதியிலான லாரிகளை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு ஆங்கில அறிவு கட்டாயம் என்பது முதல், வீட்டு உபயோகப் பொருட்களான ஷவர் மற்றும் கழிவறைகளின் தரம் வரை பல்வேறு சிறிய மற்றும் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளதாக அவர் கூறினார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்திற்குப் புறப்படுவதற்குச் சற்று முன்பாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அங்கு அவர் கிரீன்லாந்தை வாங்கும் திட்டம் மற்றும் நேட்டோ நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து உலகத் தலைவர்களுடன் விவாதிக்க உள்ளார். தனது சாதனைகள் அடங்கிய கனமான கோப்புகளைப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தரையில் தூக்கி எறிந்து தனது பாணியில் அதிரடி காட்டிய ட்ரம்ப், அமெரிக்காவை மீண்டும் உலகின் தலைசிறந்த நாடாக மாற்றியுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
On the one-year mark in office, President Donald J. Trump spoke to the press for nearly two hours.
— The White House (@WhiteHouse) January 20, 2026
And brought the receipts. pic.twitter.com/wuMKeNBcd2