LOADING...
டிக்டாக் தப்பித்தது! அமெரிக்க முதலீட்டாளர்களுடன் கைகோர்த்த டிக்டாக்; தடையை நீக்கிய டொனால்ட் ட்ரம்ப் அரசு
TikTok USDS Joint Venture LLC என்ற புதிய கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தப்பித்தது! அமெரிக்க முதலீட்டாளர்களுடன் கைகோர்த்த டிக்டாக்; தடையை நீக்கிய டொனால்ட் ட்ரம்ப் அரசு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 23, 2026
09:14 am

செய்தி முன்னோட்டம்

சீனாவின் பைட்டான்ஸ் (ByteDance) நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலி, அமெரிக்காவில் தடை செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க அந்நாட்டு முதலீட்டாளர்களுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. இதன்படி, 'TikTok USDS Joint Venture LLC' என்ற புதிய கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நிறுவனத்தில் அமெரிக்க மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் 80.1 சதவீத பங்குகளை கொண்டிருப்பார்கள். மீதமுள்ள 19.9 சதவீத பங்குகள் மட்டுமே சீன நிறுவனமான பைட்டான்ஸ் வசம் இருக்கும். டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மைக்கேல் டெல், ஆரக்கிள் (Oracle), சில்வர் லேக் மற்றும் அபுதாபியை சேர்ந்த MGX உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் முக்கிய முதலீட்டாளர்களாக இணைந்துள்ளன. இருப்பினும், டிக்டாக் ஷாப் மற்றும் விளம்பரப் பிரிவின் சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து பைட்டான்ஸ் வசமே இருக்கும்.

பின்னணி

கூட்டு நிறுவனத்தின் விவரங்கள் மற்றும் இணைப்பின் பின்னணி

டிக்டாக் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகள் ஆடம் பிரஸ்ஸர் (CEO) மற்றும் வில் ஃபாரல் (CSO) ஆகியோர் இந்த புதிய நிறுவனத்தை வழிநடத்துவார்கள். அமெரிக்க பயனர்களின் தரவுகள் மற்றும் அல்காரிதம் ஆகியவை இனி ஆரக்கிள் நிறுவனத்தின் அமெரிக்கக் கிளவுட் சர்வர்களில் மட்டுமே சேமிக்கப்படும். இதன் மூலம் தேசிய பாதுகாப்பு தொடர்பான அமெரிக்க அரசின் கவலைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் டிக்டாக்கிற்கு தடை விதிக்க முயற்சி செய்து வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த உடன்படிக்கை ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. சுமார் 20 கோடி அமெரிக்க பயனர்கள் மற்றும் 75 லட்சம் வணிக நிறுவனங்கள் இந்த செயலியை தொடர்ந்து பயன்படுத்த இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது.

Advertisement