LOADING...
போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரும் அபாயம்
சமையல் எண்ணெய்

போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரும் அபாயம்

எழுதியவர் Prasanna
Mar 11, 2026
01:39 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் அதிகரித்து வரும் சரக்குக் கட்டணங்கள் காரணமாக, இந்திய சமையல் எண்ணெய் இறக்குமதியாளர்கள் துரித கதியில் சரக்குகளைப் பெறுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உலகளாவிய சந்தையில் சமையல் எண்ணெய் விலையும், கப்பல் போக்குவரத்துக்கான சரக்குக் கட்டணமும் கணிசமாக உயர்ந்துள்ளன. இதனால் விநியோகத்தில் தாமதம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் இந்திய நிறுவனங்கள் உள்ளன. குறிப்பாக சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் விநியோகத்தை விரைவுபடுத்த இறக்குமதியாளர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர்.

சமையல் எண்ணெய்

சமையல் எண்ணெய் விலை உயருமா?

கருங்கடல் பகுதியிலிருந்து வரும் சூரியகாந்தி எண்ணெய் கப்பல்கள், செங்கடல் வழியாக வராமல் ஆப்பிரிக்காவைச் சுற்றி வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், பயண நேரம் பத்து நாட்களுக்கு மேல் அதிகரிக்கும் மற்றும் டன் ஒன்றுக்கு 20 டாலர் வரை கூடுதல் செலவாகும். இந்தியா உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் இறக்குமதியாளராக இருப்பதால், சர்வதேச விலை உயர்வு மற்றும் போக்குவரத்துச் சிக்கல்கள் உள்நாட்டு விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. தற்போது பல சுத்திகரிப்பு ஆலைகள் கையிருப்பில் உள்ள குறைந்த விலை எண்ணெயைப் பயன்படுத்தி வருகின்றன, ஆனால் புதிய கொள்முதலில் அதிக விலை காரணமாகத் தயக்கம் காட்டி வருகின்றன. சர்வதேச அளவில் நிலவும் இந்த நிச்சயமற்ற சூழல், இந்தியாவின் சமையல் எண்ணெய் சந்தையில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

Advertisement