LOADING...
சர்வதேச பிரச்சினைகளால் பாதிப்பில்லை! ரூ.6,600 கோடிக்கு இந்திய நிறுவனங்களின் IPO வெளியீடு
ஐபிஓ

சர்வதேச பிரச்சினைகளால் பாதிப்பில்லை! ரூ.6,600 கோடிக்கு இந்திய நிறுவனங்களின் IPO வெளியீடு

எழுதியவர் Prasanna
Mar 10, 2026
02:12 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச அளவில் பிரச்சினைகள் இருந்து வந்தாலும் இந்திய பங்குச்சந்தையில் புதிய நிறுவனங்கள் காலடி எடுத்து வைப்பதை அது பெரியளவில் தடுக்கவில்லை என்றே தெரிகிறது. இந்த வாரம் மட்டும் நான்கு புதிய IPO-கள் முதலீட்டாளர்களின் முதலீட்டிற்காகக் காத்திருக்கின்றன. நான்கு புதிய நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவுள்ளன. மார்ச் 9ம் தேதியன்று தொடங்கு நான்கு IPO-க்களில் முதலீட்டாளர்கள் பங்குகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் மூன்று மெயின்போர்டு IPO-களாகவும், ஒன்று SME IPO ஆகவும் இருக்கிறது.

பங்குச்சந்தை

புதிய IPO-க்கள்

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமான ராஜ்புதானா ஸ்டீல்ஸ் ரூ.255 கோடி முதலீட்டிற்காகக் கோரியிருக்கிறது. இந்த IPO மார்ச் 9ம் தேதியன்று திறந்திருக்கிறது. தொடர்ந்து டோல் பிளாஸா நிர்வாக சேவைகளை வழங்கி வரும் மேன்பவர் சர்வீசஸ் நிறுவனம் ரூ.323 கோடிக்கு IPO வெளியிட்டுள்ளது. மார்ச் 10ம் (இன்று) முதல் இதற்கு முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டுமான முதலீட்டு நிறுவனமான ராஜ்மார்க் இன்ஃப்ரா இன்வென்ஸ்ட்மென்ட் ட்ரஸ்ட் நிறுவனமானது அதிகபட்சமாக ரூ.6,000 கோடி ரூபாய்க்கு பங்கு வெளியிட்டிருக்கிறது. நாளை (மார்ச் 11) முதல் இந்த நிறுவனத்தின் பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisement