LOADING...
லேப்டாப் விலை 35% வரை உயர வாய்ப்பு, என்ன காரணம்?
லேப்டாப்

லேப்டாப் விலை 35% வரை உயர வாய்ப்பு, என்ன காரணம்?

எழுதியவர் Prasanna
Mar 11, 2026
06:20 pm

செய்தி முன்னோட்டம்

தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் விலை அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், லேப்டாப் விலைகள் நடப்பு ஆண்டில் 35% வரை உயரக்கூடும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது புதிய லேப்டாப் வாங்கத் திட்டமிட்டுள்ள மாணவர்களுக்கும், அலுவலகப் பணியாளர்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. லேப்டாப்களின் முக்கியமான பாகங்களாகக் கருதப்படும் மெமரி சிப்கள் மற்றும் கிராபிக்ஸ் கார்டுகளின் (GPU) உற்பத்திச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக இவற்றுக்கான தேவை உலகளவில் அதிகரித்துள்ளது, இது லேப்டாப் தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

லேப்டாப்

சந்தை வீழ்ச்சி

விலை உயர்வு காரணமாக, இந்த 2026ம் ஆண்டு லேப்டாப் விற்பனைச் சந்தை சுமார் 8 சதவீதம் வரை சுருங்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. விலையேற்றத்தினால் பயனாளர்கள் புதிய சாதனங்கள் வாங்குவதைத் தள்ளிப்போடலாம் எனவும், இதுவே குறைவான லேப்டாப்கள் விற்பனையாவதற்கான காரணமாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது. குறிப்பாக பட்ஜெட் ரக லேப்டாப்கள் மற்றும் கேமிங் லேப்டாப்களின் விலையில் இந்த மாற்றம் அதிகமாகத் தெரியும். இதுமட்டுமின்றி, உதிரிபாகங்களின் பற்றாக்குறையும் விலையேற்றத்திற்கு ஒரு காரணியாக உள்ளது. இதுவரை ரூ.30,000 முதல் ரூ.35,000 வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த பட்ஜெட் லேப்டாப்களின் விலை ரூ.45,000 வரை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement