LOADING...
ஆபரணத் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு; இன்றைய விலை நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு; இன்றைய விலை நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 11, 2026
10:07 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, தொடர்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமை (மார்ச் 11) அதிகரித்துள்ளது. புதன்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹70 அதிகரித்து ₹15,120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹560 அதிகரித்து ₹1,20,960 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹77 அதிகரித்து ₹16,495 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹616 அதிகரித்து ₹131,960 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹60 அதிகரித்து ₹12,950 ஆகவும், ஒரு சவரன் ₹480 அதிகரித்து ₹1,03,600 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே, புதன்கிழமை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹300.00 ஆகவும், ஒரு கிலோ ₹3,00,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சமீப காலமாக தங்கம் வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றமில்லாமல் இருந்தாலும், சர்வதேச அரசியல் சூழல்களால் மீண்டும் நிலையற்ற தன்மை ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement