LOADING...
"AI தெரியாதவர்களுக்கு நோ ப்ரோமோஷன்!": Accenture நிறுவனத்தின் அதிரடி ரூல்ஸ்
AI கருவிகளை கற்பது கட்டாயம் என்று அந்த நிறுவனத்தின் CEO தெரிவித்துள்ளார்

"AI தெரியாதவர்களுக்கு நோ ப்ரோமோஷன்!": Accenture நிறுவனத்தின் அதிரடி ரூல்ஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 16, 2026
02:09 pm

செய்தி முன்னோட்டம்

முன்னணி தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை நிறுவனமான Accenture-இல், ஊழியர்கள் தங்களின் தொழில் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், ப்ரோமோஷன் பெற வேண்டுமென்றால் AI கருவிகளை கற்பதும், பயன்படுத்துவதும் இனி விருப்பத்தேர்வு அல்ல, அது கட்டாயம் என்று அந்த நிறுவனத்தின் CEO ஜூலி ஸ்வீட் தெரிவித்துள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய ஜூலி ஸ்வீட், கடந்த மூன்று ஆண்டுகளாக அக்ஸென்சர் நிறுவனம் தனது பணிச்சூழலில் AI தொழில்நுட்பத்தை படிப்படியாக ஒருங்கிணைத்து வருவதாக குறிப்பிட்டார். "கணினிகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதைப் பயன்படுத்துவது எப்படி கட்டாயமானதோ, அதேபோல்தான் இப்போது AI-யும். இது ஊழியர்களைக் கட்டாயப்படுத்துவது அல்ல, காலத்திற்கு ஏற்ற மாற்றம்," என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

அம்சங்கள்

நிறுவனத்தின் அறிவிப்பிற்கு பின் இருக்கும் முக்கிய காரணிகள்

தனது ஊழியர்களுக்கு AI குறித்த பயிற்சி அளிக்க அக்ஸென்சர் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. இருப்பினும், ஊழியர்கள் சுயமாக இக்கருவிகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது. AI வந்த பிறகு ஜூனியர் ஊழியர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என்ற அச்சத்தை ஜூலி ஸ்வீட் மறுத்துள்ளார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உலகளவில் அதிக அளவிலான ஆரம்ப நிலை ஊழியர்களை தாங்கள் வேலைக்கு எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். கல்லூரியிலிருந்து வெளியே வரும் பட்டதாரிகள் ஏற்கனவே AI தொழில்நுட்பத்தில் புலமை பெற்றவர்களாக இருப்பதால், அவர்களை வேலைக்கு எடுப்பதில் நிறுவனம் ஆர்வம் காட்டுகிறது. மனிதத் திறன்களையும் தொழில்நுட்பத்தையும் இணைப்பதே நிறுவனத்தின் நீண்டகால நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement