LOADING...
அவசரமாக பணம் தேவையா? மியூச்சுவல் ஃபண்டைக் கலைக்காமல் பணம் பெறுவது எப்படி?
மியூச்சுவல் ஃபண்டு

அவசரமாக பணம் தேவையா? மியூச்சுவல் ஃபண்டைக் கலைக்காமல் பணம் பெறுவது எப்படி?

எழுதியவர் Prasanna
Mar 10, 2026
12:47 pm

செய்தி முன்னோட்டம்

நமக்கு முதலீட்டிற்கு சாதகமான அம்சங்களில் ஒன்றாக மியூச்சுவல் ஃபண்டுகள் இருக்கின்றன. ஆனால் பிரச்சினை என்னவென்றால், நமக்கு அவசரமாக பணம் தேவைப்படும் நேரத்தில் நாம் முதலில் கைவைப்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் தான். அது ஒரு முதலீடு என்பதை மறந்துவிட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என மியூச்சுவல் ஃபண்டைத் திரும்ப எடுத்துக் கொள்வோம். ஆனால், அப்படி செய்யாமல், அந்த மியூச்சுவல் ஃபண்டு எதிராக பணம் பெறும் வசதி ஒன்று இருக்கிறது. எனவே அடுத்த முறை அவசரமாக பணம் தேவைப்படும் போது இந்த முறையைக் கடைப்பிடியுங்கள்.

மியூச்சுவல் ஃபண்டு

மியூச்சுவல் ஃபண்டுக்கு எதிராகக் கடன்

தங்கம் வெள்ளி போல மியூச்சுவல் ஃபண்டும் ஒரு முதலீடு தான். எனவே நிதி நிறுவனங்கள் தங்கத்தைப் போலவே மியூச்சுவல் ஃபண்டையும் பணயமாக வைத்துக் கொண்டு கடன் வழங்குகின்றன. நம்முடைய மியூச்சுவல் ஃபண்டு தொகையில் 50% அல்லது மூன்றில் இரண்டு பங்கு வரை கடனாக நாம் பெற முடியும். இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் வரையில் அந்த மியூச்சுவல் ஃபண்டை வேறு இடத்திற்கு மாற்றவோ அல்லது அந்தப் பணத்தை வெளியே எடுக்கவோ முடியாது. மேலும், முதலீட்டை அடகு வைத்து நாம் கடன் பெறுவதால், குறைவான ரிஸ்க் என்பதால், குறைவான வட்டியிலேயே நாம் கடன் பெற முடியும். இனி அவசர தேவைகளுக்கு இந்த முறையைப் பயன்படுத்தி பணம் பெறுங்கள்.

Advertisement