LOADING...
யாருக்கு கேஸ் சிலிண்டர் முதலில் கிடைக்கும்? மத்திய அரசின் புதிய 'ரேஷனிங்' முறை! முழு விவரம் இதோ
இயற்கை எரிவாயு விநியோகத்திற்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

யாருக்கு கேஸ் சிலிண்டர் முதலில் கிடைக்கும்? மத்திய அரசின் புதிய 'ரேஷனிங்' முறை! முழு விவரம் இதோ

எழுதியவர் Sekar Chinnappan
Mar 10, 2026
03:31 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச அளவில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிற்குள் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை முறைப்படுத்த மத்திய அரசு 'இயற்கை எரிவாயு (விநியோக ஒழுங்குமுறை) ஆணை, 2026' ஐப் பிறப்பித்துள்ளது. இதன் மூலம், தட்டுப்பாடு நிலவும் காலங்களில் யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்கான புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்கள் இங்கே:-

முன்னுரிமை

முதலிடம் யாருக்கு? (100% விநியோகம்)

மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் உத்தரவுப்படி, கீழ்க்கண்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு 100% முன்னுரிமை அளிக்கப்படும்: வீடுகளுக்கான குழாய் எரிவாயு (PNG): வீடுகளில் சமைக்கப் பயன்படுத்தப்படும் கேஸ். போக்குவரத்து (CNG): வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிபொருள். எல்பிஜி (LPG) உற்பத்தி: வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் தயாரிப்பு. முக்கிய பைப்லைன் செயல்பாடுகள்.

ஒதுக்கீடு

மற்ற துறைகளுக்கான ஒதுக்கீடு

தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு மற்ற துறைகளுக்கான எரிவாயு விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது: உரம் தயாரிப்பு ஆலைகள்: கடந்த 6 மாத கால சராசரி தேவையில் 70% மட்டுமே வழங்கப்படும். தொழிற்சாலைகள்: தேசிய எரிவாயு கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளுக்கு 80% விநியோகம் உறுதி செய்யப்படும். பெட்ரோகெமிக்கல் மற்றும் மின் உற்பத்தி ஆலைகள்: அத்தியாவசியத் தேவைகளுக்காக இந்தத் துறைகளுக்கான எரிவாயுவை அரசு வேறு திசைக்கு மாற்ற அதிகாரம் பெற்றுள்ளது.

Advertisement

கண்காணிப்பு

கண்காணிப்பு அமைப்பு

இந்த விநியோக முறையைத் துல்லியமாகக் கண்காணிக்க பெட்ரோலியத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு நோடல் ஏஜென்சியாக நியமிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் கப்பல் போக்குவரத்து சீராகும் வரை இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனத் தெரிகிறது. இதற்கிடையே, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை அமல்படுத்தி, எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement