உலகிலேயே அதிக கோடீஸ்வரர்கள் இருக்கும் நாடு எது? இந்தியா எந்த இடம்?
செய்தி முன்னோட்டம்
உலக பொருளாதாரத்தில் பெரும் செல்வந்தர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், உலகம் முழுவதும் 3,428 கோடீஸ்வரர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது வரலாற்றிலேயே மிக அதிகமான எண்ணிக்கையாகும். இந்தப் பட்டியலில் பிரபல தொழில்நுட்ப ஜாம்பவான்கள் இடப்பெற்றுள்ளனர். இதில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என தெரிந்துகொள்வோம்.
ஆதிக்கம்
அமெரிக்கா மற்றும் சீனாவின் ஆதிக்கம்
அமெரிக்கா: 989 கோடீஸ்வரர்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் நீடிக்கிறது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 8.4 டிரில்லியன் டாலர். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் 839 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்த ஆண்டு டெய்லர் ஸ்விஃப்ட், பியான்சே போன்ற பிரபலங்களும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர். சீனா: 539 கோடீஸ்வரர்களுடன் சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது. ஏஐ மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறையின் வளர்ச்சியால் சீனாவின் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டிக்டாக் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாங் யிமிங் (Zhang Yiming) சீனாவின் பெரும் பணக்காரராகத் திகழ்கிறார்.
இந்தியா
இந்தியா மற்றும் பிற நாடுகள்
இந்தியா: 229 கோடீஸ்வரர்களுடன் இந்தியா உலகளவில் மூன்றாம் இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது. இந்தியக் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு 1 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. முகேஷ் அம்பானி 99.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்தியாவின் பெரும் பணக்காரராக நீடிக்கிறார். நான்காம் இடத்தில் ஜெர்மனி 212 கோடீஸ்வரங்களுடன்(டீட்டர் ஸ்வார்ஸ் -$67.2B) உள்ளது. அடுத்த இடத்தில் ரஷ்யா 147 கோடீஸ்வரர்களுடன்(அலெக்ஸி மொர்தாஷோவ்-$37B) உள்ளது. பிரிட்டன் 10-வது இடத்திலிருந்து 12-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் சிறந்து விளங்கும் தைவான் முதன்முறையாக டாப் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தான் (Sualeh Asif - $1.3B) மற்றும் ஆப்கானிஸ்தான் (Mirwais Azizi - $1.4B) ஆகிய நாடுகள் மீண்டும் இந்த பட்டியலில் இணைந்துள்ளன.