நாடு முழுவதும் ஒரே பயண அட்டை, புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது போன்பே
செய்தி முன்னோட்டம்
போன்பே நிறுவனமானது நாடு முழுவதும் போக்குவரத்து தொடர்பான கட்டணம் செலுத்தை எளிமையாகும் வகையில் ரூபே 'தேசிய பொது இடப்பெயர்வு அட்டை'யை (National Common Mobility Card, NCMC) வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் போக்குவரத்து சார்ந்த கட்டணங்களுக்கு இந்த அட்டையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரயில், மெட்ரோ ரயில், பேருந்து, டோல் கேட் மற்றும் பார்க்கிங் என போக்குவரத்து தொடர்பான அனைத்து இடங்களிலும் இந்த அட்டையைப் பயன்படுத்த முடியுமாம். இது போக்குவரத்து கட்டணம் செலுத்தல் முறையையே முழுமையாக மாற்றும் திறனைக் கொண்டிருக்கிறது.
போன்பே
இணையம் தேவையில்லை
ஆம், இந்த அட்டையைப் பயன்படுத்த இணையம் தேவையில்லை. கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளில் இருக்கும் Tap and Go வசதியை இந்த NCMC கார்டிலும் கொடுத்திருக்கிறது போன்பே. பேலன்ஸ் தொகை கார்டின் சிப்பிலேயே சேமிக்கப்பட்டிருக்கும். எனவே நாம் கட்டணம் செலுத்த வேண்டிய இடத்தில் கார்டை டேப் செய்தால் போதும். ஆனால் அதற்கு அவர்களும் NCMC சேவைப் பயன்பாட்டை உறுதி செய்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 2000 ரூபாய் வரை இந்தக் கார்டின் சிப்பில் சேர்த்து வைத்துக் கொள்ள முடியும். இணையம் இல்லாமல் ரூ.500 வரையிலான கட்டணங்களை இந்தக் கார்டு மூலம் செலுத்திக் கொள்ளலாம். UPI, பணம் அல்லது டெபிட் கார்டு மூலம் NCMC கார்டில் பேலன்ஸை லோடு செய்து கொள்ளலாம்.
UPI
முதற்கட்டமாக ஹைதராபாத்தில்
முதற்கட்டமாக L&T-யுடன் கூட்டணி அமைத்து ஹைதாராபாத்தில் இந்த பயண அட்டையை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கிறது போன்பே. ஹைதராபாத் மெட்ரோ டிக்கெட் கவுன்டர்களில் இதனை நாம் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், நாடு முழுவதும் இது செல்லுபடியாகும். இந்தக் கார்டைப் பயன்படுத்தி, சென்னை, மும்பை, பெங்களூரு மற்றும் டெல்லி என எந்த மெட்ரோவிலும் டிக்கெட்டுக்கான பணத்தை செலுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற நகரங்களிலும் இந்தக் கார்டு பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது.