பவர்பிளேயில் 92 ரன்கள்; டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா இமாலய சாதனை
செய்தி முன்னோட்டம்
அகமதாபாத்தில் இன்று (மார்ச் 8) நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியத் தொடக்க ஆட்டக்காரர்கள் ருத்ரதாண்டவம் ஆடினர். இந்திய கிரிக்கெட் அணி முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் குவித்து, டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பவர்பிளேயில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. இதற்கு முன்னதாக 2024 இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி இதே 92 ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டாப் 5 அணிகள்
பவர்பிளேயில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 அணிகள்
டி20 உலகக்கோப்பை தொடர்களில் முதல் 6 ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த அணிகளின் பட்டியல் இதோ: 92/0 - இந்தியா vs நியூசிலாந்து (அகமதாபாத், 2026 இறுதிப்போட்டி) 92/1 - வெஸ்ட் இண்டீஸ் vs ஆப்கானிஸ்தான் (பிரிட்ஜ்டவுன், 2024) 91/1 - நெதர்லாந்து vs அயர்லாந்து (சில்ஹெட், 2014) 89/3 - இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா (மும்பை, 2016) 86/1 - இந்தியா vs நமீபியா (டெல்லி, 2026)
பலம்
இந்திய அணியின் பலம்
இந்த 2026 உலகக்கோப்பைத் தொடரில் மட்டும் அதிகபட்ச பவர்பிளே ஸ்கோர் பட்டியலில் இந்தியா இரண்டு முறை (92/0 மற்றும் 86/1) இடம்பெற்றுள்ளது. இது இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் எவ்வளவு தீவிரமான ஃபார்மில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. குறிப்பாக, இறுதிப்போட்டியில் அழுத்தமான சூழலிலும் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்துள்ளது.