LOADING...
டி20 உலககோப்பை தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணியின் பரிசுத் தொகை எவ்வளவு?
2026 டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா

டி20 உலககோப்பை தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணியின் பரிசுத் தொகை எவ்வளவு?

எழுதியவர் Prasanna
Mar 09, 2026
05:38 pm

செய்தி முன்னோட்டம்

2026 டி20 உலககோப்பைத் தொடர் மார்ச் 8ல் முடிவடைந்தது. இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மோதியதில், இந்தியா அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? இந்த உலககோப்பை தொடரில் அனைத்து அணிகளுக்கும் பகிர்ந்தளிக்க சுமார் 11 மில்லியன் அமெரிக்க டாலர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒதுக்கீடு செய்திருந்தது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.101 கோடியாகும். இதில் வெற்றி பெற்ற இந்திய அணி ரூ.2.34 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெறுகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.21.50 கோடியாகும். ஒவ்வொரு போட்டியிலும் வெற்று பெறும் அணிக்கு 31,154 டாலர்களும் (ரூ.28.64 லட்சம்) கொடுக்கப்படுகிறது. அதுவும் இந்திய அணியின் வெற்றிக் கணக்கில் சேரும்.

கிரிக்கெட்

மற்ற அணிகளுக்கு எவ்வளவு?

இரண்டாம் இடம் பெற்ற நியூசிலாந்து அணி 1.17 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெறுகிறது. இந்திய மதிப்பிற்கு இது ரூ.10.75 கோடிக்கு இணையாகும். அரையிறுதி வரை முன்னேறிய தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் 6.75 லட்சம் அமெரிக்க டாலர்களைப் (இந்திய மதிப்பிற்கு ரூ.6.70 கோடி) பெறுகின்றன. 5 முதல் 8ம் இடம் வரை பிடித்த அணிகளுக்கு 2.70 லட்சம் அமெரிக்க டாலர்களும் (ரூ.2.48 கோடி), 9 முதல் 12ம் இடம் வரை பிடித்த அணிகளுக்கு 1.35 லட்சம் அமெரிக்க டாலர்களும் (ரூ.1.24 கோடி), 13 முதல் 20ம் இடம் வரையில் 1.12 லட்சம் டாலர்களும் (ரூ.1.03 கோடி) பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.

Advertisement