LOADING...
டி20 உலகக்கோப்பைத் தொடர்களில் அதிகவேக அரைசதம் அடித்த இந்திய வீரர்கள்
அபிஷேக் ஷர்மா அதிவேக அரைசதம்

டி20 உலகக்கோப்பைத் தொடர்களில் அதிகவேக அரைசதம் அடித்த இந்திய வீரர்கள்

எழுதியவர் Prasanna
Mar 09, 2026
06:33 pm

செய்தி முன்னோட்டம்

டி20 உலகக்கோப்பை நாக்-அவுட் போட்டிகளில் குறைவான பந்துகளில் அதிகவேக அரைசதம் அடித்து அசத்தியுள்ளார் இந்திய பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா. வெறும் 18 பந்துகளில் இந்த அரைசதத்தைப் பூர்த்தி செய்தார் அவர். இந்த அரை சதத்தின் மூலமாக 19 பந்துகளில் டி20 உலகக்கோப்பை நாக்-அவுட் போட்டியில் அரைசதம் அடித்த நியூசிலாந்தைச் சேர்ந்த ஃபின் ஆலனின் சாதனையை முறியடித்தார். சரி, டி20 உலகக்கோப்பைத் தொடர்களில் அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீரர்கள் யார் யார் எனப் பார்க்கலாம்.

டி20 உலகக்கோப்பை

ரோஹித் ஷர்மா

2024 உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெறும் 19 ரன்களில் அரைசதம் கடந்தார் அப்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா. அன்றைய போட்டியில் 41 பந்துகளில் 92 ரன்களைக் குவித்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 205 ரன்கள் குவித்த இந்திய அணி, 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. அபிஷேக் ஷர்மாவின் இன்னிக்ஸ் ரோஹித் ஷர்மாவின் இந்த இன்னிங்ஸுக்கு முன்னதாக இருக்கிறது.

டி20

கேஎல் ராகுல்

அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து 18 பந்துகளில் அரைசதம் அடித்த பெருமையைப் பகிர்ந்து கொள்கிறார் மற்றொரு இந்திய வீரர் கேஎல் ராகுல். 2021 உலகக்கோப்பைத் தொடரில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 18 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார் அவர். இதில் ஆறு ஃபோர்களும், மூன்று சிக்ஸர்களும் அடக்கம். இதனால் அன்றைய போட்டியில் ஸ்காட்லாந்து அணி கொடுத்திருந்த 86 ரன்கள் இலக்கை வெறும் 6.3 ஓவர்களில் சேஸ் செய்தது இந்திய அணி.

Advertisement

கிரிக்கெட்

யுவராஜ் சிங்

டி20 கிரிக்கெட் இருக்கும் வரை பேசப்படப் போகும் ஒரு இன்னிங்ஸை 2007ல், முதல் டி20 உலகக்கோப்பைத் தொடரில் ஆடினார் யுவராஜ் சிங். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெறும் 12 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தில் யுவராஜ் சிங். களத்தில் ஆண்ட்ரூ ஃபிளின்ட்ஆஃப் உடனான மோதலில், ஸ்டூவர்ட் பிராடுக்கு எதிராக அந்தப் போட்டியில் தான் ஒரே ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களையும் யுவராஜ் பறக்க விட்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement