LOADING...
CSK-வில் இணைந்தது குறித்து முதல் முறையாக மனம் திறந்த சஞ்சு சாம்சன்
ரூ. 18 கோடிக்கு சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி டிரேடிங் முறையில் வாங்கியது

CSK-வில் இணைந்தது குறித்து முதல் முறையாக மனம் திறந்த சஞ்சு சாம்சன்

எழுதியவர் Prasanna
Mar 17, 2026
10:43 am

செய்தி முன்னோட்டம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விலகி, ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ரூ. 18 கோடிக்கு சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி டிரேடிங் முறையில் வாங்கியது. ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சுவின் இந்த மாற்றம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தனது காலம் முடிந்துவிட்டதாக உணர்ந்ததால் அங்கிருந்து விலகத் தீர்மானித்ததாக சஞ்சு தெரிவித்துள்ளார். "அந்த அணியுடன் எனக்கு நீண்ட காலத் தொடர்பு இருந்தாலும், களத்தில் நான் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க மாட்டேன்," என்று அவர் கூறியுள்ளார்.

கிரிக்கெட்

தோனியுடன் உரையாடல்:

சிஎஸ்கே அணியில் இணைந்தது குறித்து மகேந்திர சிங் தோனியுடன் தொலைபேசியில் பேசியதாகவும், அவருடன் இரண்டு மாதங்கள் செலவிட ஆர்வமாக இருப்பதாகவும் சஞ்சு கூறியுள்ளார். தோனியிடமிருந்து நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பு எனக் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பையின் போது சென்னை ரசிகர்கள் தனக்கு அளித்த ஆதரவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும், அவர்கள் தன்னைத் தங்களில் ஒருவராகப் பார்ப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

சஞ்சு சாம்சன்

முதல் போட்டியே ராஜஸ்தானுடன்:

ஐபிஎல் 2026-ன் சிஎஸ்கே தனது முதல் போட்டியில் மார்ச் 30-ம் தேதி குவஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தனது முன்னாள் அணிக்கு எதிராகவே முதல் போட்டியில் களமிறங்குவது சஞ்சு சாம்சனுக்கு ஒரு சவாலான அதேசமயம் சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும். சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் 321 ரன்கள் குவித்து தொடர் நாயகன் (Player of the Tournament) விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வருகை சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement