அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்கள் பாகிஸ்தானுக்குத் தேவை, பாராட்டிய முன்னாள் கிரிக்கெட் வீரர்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் அபிஷேக் ஷர்மா குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வியந்து பாராட்டியுள்ளனர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி, "எங்கள் நாட்டில் அபிஷேக் ஷர்மா போன்ற இரண்டு அல்லது மூன்று வீரர்கள் இருந்தாலே போதும், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் நிலைமையே மாறியிருக்கும்" என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் தற்போதைய பேட்டிங் வரிசையில் அதிரடியான மற்றும் இக்கட்டான சூழலில் போட்டியை மாற்றக்கூடிய வீரர்கள் இல்லாததைச் சுட்டிக்காட்டிய அவர், அபிஷேக்கின் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெகுவாகப் புகழ்ந்தார்.
அபிஷேக் ஷர்மா
அபிஷேக்கை விமர்சித்த முகமது ஆமிர்
முன்னதாக மற்றொரு பாகிஸ்தான் வீரர் முகமது ஆமிர் அபிஷேக்கை விமர்சித்திருந்தார். அவரை அதிரடியாக மட்டுமே ஆடக்கூடிய வீரர், ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்ப டிஃபென்ஸிவ்வாக ஆடத் தெரியாது என்ற வகையில் குறிப்பிட்டிருந்தார் ஆமிர். அந்தக் கருத்துக்கு எதிர்க்கருத்தளிக்கும் வகையிலேயே பசித் அலி அபிஷேக்கை பாராட்டியிருக்கிறார். "அபிஷேக் ஷர்மா ஒரு மேட்ச் வின்னர். அவர் களத்தில் இருக்கும்போது எந்தவொரு இலக்கையும் எட்ட முடியும் என்ற நம்பிக்கை இந்திய அணிக்கு இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இத்தகைய துணிச்சலான வீரர்களை உருவாக்கத் தவறிவிட்டது" என்று அவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.