LOADING...
ஐசிசி அனைத்து அணிகளுக்கும் சேர்த்து வழங்கியதை விட அதிகம்; இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு அறிவித்தது பிசிசிஐ
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு அறிவித்தது பிசிசிஐ

ஐசிசி அனைத்து அணிகளுக்கும் சேர்த்து வழங்கியதை விட அதிகம்; இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு அறிவித்தது பிசிசிஐ

எழுதியவர் Sekar Chinnappan
Mar 10, 2026
01:02 pm

செய்தி முன்னோட்டம்

அகமதாபாத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ ₹131 கோடி ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது. இது பிசிசிஐ வரலாற்றிலேயே ஒரு அணிக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த பரிசுத் தொகையாகும். கடந்த 2024 ஆம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையில் இந்தியா உலகக்கோப்பையை வென்றபோது ₹125 கோடி வழங்கப்பட்டது. தற்போது சூர்யகுமார் யாதவ் தலைமையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்ததால், அந்தத் தொகையை ₹131 கோடியாக உயர்த்தி பிசிசிஐ தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

பின்னணி

வரலாற்றுச் சாதனைப் பின்னணி

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மூன்று முறை கோப்பையை வென்ற முதல் அணி மற்றும் கோப்பையைத் தக்கவைத்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா மகுடம் சூடியது. மேலும், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் உள்நாட்டில் பட்டம் வென்ற முதல் அணி என்ற சாதனையையும் படைத்தது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி

ஐசிசி வழங்கிய பரிசுத் தொகை

பிசிசிஐ தவிர, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பிலும் இந்திய அணிக்கு பெரும் தொகை வழங்கப்பட்டுள்ளது: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு சுமார் 3 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ஏறத்தாழ ₹27.48 கோடி) ஐசிசி கொடுத்துள்ளது. மேலும், குரூப் ஸ்டேஜ் மற்றும் சூப்பர் 8 சுற்றுகளில் வெற்றி பெற்ற ஒவ்வொரு போட்டிக்கும் தலா ₹28.6 லட்சம் வீதம் போனஸ் தொகையாகவும் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்தத் தொடருக்காக ஐசிசி 13.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹124 கோடி) என்ற சாதனை அளவிலான பரிசுத் தொகுப்பை ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement