LOADING...
மார்ச் 28இல் ஐபிஎல் 2026 திருவிழா ஆரம்பம்! தொடக்கத் தேதியை அறிவித்தது பிசிசிஐ; ரசிகர்கள் உற்சாகம்!
ஐபிஎல் 2026க்கான தொடக்கத் தேதியை அறிவித்தது பிசிசிஐ

மார்ச் 28இல் ஐபிஎல் 2026 திருவிழா ஆரம்பம்! தொடக்கத் தேதியை அறிவித்தது பிசிசிஐ; ரசிகர்கள் உற்சாகம்!

எழுதியவர் Sekar Chinnappan
Mar 08, 2026
06:56 pm

செய்தி முன்னோட்டம்

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், இந்தியன் பிரீமியர் லீக் 2026 (ஐபிஎல் 2026) சீசன் வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக, ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

ஆர்சிபி

நடப்பு சாம்பியனாக களம் காணும் ஆர்சிபி

கடந்த 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால், வரும் 2026 சீசனில் ஆர்சிபி அணி நடப்பு சாம்பியனாகக் களம் இறங்குகிறது. கடந்த ஆண்டு பட்டம் வென்ற பிறகு பெங்களூருவில் நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடத்துவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பெங்களூர்

பெங்களூர் ரசிகர்களுக்கு நற்செய்தி

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் சந்தோஷ் மேனன் அளித்துள்ள தகவலின்படி, ஐபிஎல் 2026 இன் முக்கிய மாற்றங்கள் இதோ: ஆர்சிபி அணி தனது 5 உள்ளூர் போட்டிகளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடும். 2026 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் ஒரு பிளே-ஆஃப் போட்டி பெங்களூரில் நடைபெறும். ஆர்சிபி அணியின் மீதமுள்ள 2 உள்ளூர் போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறும்.

Advertisement

அறிக்கை

ஆர்சிபி நிர்வாகத்தின் அறிக்கை

பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒத்துழைப்பு நல்கிய கர்நாடக அரசு மற்றும் காவல்துறைக்கு ஆர்சிபி சிஇஓ ராஜேஷ் மேனன் நன்றி தெரிவித்துள்ளார். "சின்னசாமி மைதானம் என்பது வெறும் மைதானம் மட்டுமல்ல, அதுவே எங்கள் அணியின் அடையாளம்" என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மைதானத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால், ரசிகர்கள் தங்களின் விருப்பமான அணியை மீண்டும் சொந்த மண்ணில் கண்டு ரசிக்கலாம்.

Advertisement