மார்ச் 12 அன்று ஐபிஎல் முதற்கட்ட அட்டவணை வெளியீடு; உறுதி செய்தது பிசிசிஐ
செய்தி முன்னோட்டம்
டி20 உலகக்கோப்பையை முடித்த கையோடு ஐபிஎல்லுக்கு தயாராகி வருகிறது இந்தியா. மார்ச் 28ம் தேதியன்று இந்தாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் அட்டவணையை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல் அட்டவணை வெளியீட்டுத் தேதியை உறுதி செய்துள்ளார் பிசிசிஐ செயலாளரான தேவஜித் சைக்கியா. மார்ச் 12ம் தேதியன்று ஐபிஎல் தொடருக்கான முதற்கட்ட அட்டவணையை வெளியிடவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்
2026 ஐபிஎல் அட்டவணை
அவர் தெரிவித்திருப்பதன் படி, முதல் 20 நாளுக்கான அட்டவணையை மட்டும் முதலில் வெளியிடவுள்ளது பிசிசிஐ. அடுத்த கட்டங்களுக்கான அட்டவணையை அடுத்தடுத்த வெளியிட கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. வரும் மாதங்களிலேயே மேற்கு வங்கம், அசாம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் தேர்தல் நடக்கவிருப்பதால், அதற்கேற்ற வகையில் அடுத்தகட்ட போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. கடந்தாண்டு முதல் முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி அணியே இந்த முறை முதல் போட்டியில் டிஃபெண்டிங் சாம்பியனாக போட்டியைத் துவக்கவுள்ளது.