LOADING...
கூகுள் பிளேஸ்டோரில் இந்தியன் ஆயில் ஒன் செயலி முதலிடம்
பிளேஸ்டோரில் முதலிடம் பிடித்த இந்தியன் ஆயில் செயலி

கூகுள் பிளேஸ்டோரில் இந்தியன் ஆயில் ஒன் செயலி முதலிடம்

எழுதியவர் Prasanna
Mar 15, 2026
01:02 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நிலவும் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு காரணமாக, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியான 'IndianOil ONE', கூகுள் பிளே ஸ்டோரில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த சில நாட்களாக நிலவும் எரிவாயு சிலிண்டர் விநியோகத் தட்டுப்பாட்டால், மக்கள் அதிகளவில் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இதன் விளைவாக, உலகளவில் பிரபலமான சாட்ஜிபிடி செயலியைப் பின்னுக்குத் தள்ளி, இந்திய பிளே ஸ்டோரில் 'IndianOil ONE' முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பிளேஸ்டோர்

இந்தியன் ஆயில் செயலி

சிலிண்டர் முன்பதிவு செய்வது மட்டுமல்லாமல், டெலிவரி நிலையை துல்லியமாகக் கண்காணிக்கவும், அருகிலுள்ள விநியோகஸ்தர்களைக் கண்டறியவும் இந்தச் செயலி மக்களுக்குப் பெரிதும் உதவுகிறது. தற்போது இந்தச் செயலி 4.4 நட்சத்திர மதிப்பீட்டுடன் உள்ளது. சேவைத் தட்டுப்பாடுகள் நிலவும் வேளையில், டிஜிட்டல் முறையிலான தீர்வுகள் எந்தளவு அத்தியாவசியமாகின்றன என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது. பழைய ஆர்டர்களின் விவரங்களைப் பார்ப்பது, சேவை புகார்களைப் பதிவு செய்வது மற்றும் ரிவார்டு புள்ளிகளை நிர்வகிப்பது போன்ற வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

Advertisement