லேப்டாப் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்க இதனைச் செய்யுங்கள்
செய்தி முன்னோட்டம்
லேப்டாப் போன்ற எலெக்ட்ரானிக் பொருட்களைப் பயன்படுத்தும் வாங்கும் போது நீண்ட காலம் உழைக்கும் பேட்டரி கொண்ட தயாரிப்புகளைப் பார்த்து பார்த்து வாங்குவோம். ஆனால் பயன்படுத்தும் போது முறையாகப் பயன்படுத்த மாட்டோம். இதனால் பேட்டரியின் ஆயுட்காலம் அதன் ஸ்டாண்டர்டான அளவை விட சற்று குறைவாகவே வரும். 10 ஆண்டுகள் வரை உழைக்கக்கூடிய பேட்டரி கூட ஆறு ஆண்டுகளிலேயே பழுதாகி விடும். லேப்டாப் பேட்டரியின் ஆயுட் காலத்தை நீட்டிக்கும் வகையில் எப்படிப் பயன்படுத்துவது என்பதை இங்கே நாம் பார்க்கலாம்.
லேப்டாப்
லேப்டாப் பேட்டரியின் கூடுதல் ஆயுட்காலத்திற்கு.
குறைவான ஸ்கிரீன் பிரைட்னஸில் பயன்படுத்துதல். ஸ்கிரீன் பிரைட்னஸ் அதிகளவில் பேட்டரியைப் பயன்படுத்தும். அதிக பேட்டரி பயன்பாடு என்றால் அதன் ஆயுட்காலமும் குறையும். தேவைக்கு மேலாக ஸ்கிரீன் பிரைட்னஸைப் பயன்படுத்த வேண்டாம். லேப்டாப்பில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு அம்சமுமே பேட்டரியை உரிஞ்சக்கூடியவை தான். எனவே தேவையில்லாத போது ப்ளூடூத், வை-பை, போன்ற அம்சங்களை அணைத்து வைக்க பழகிக் கொள்ளுங்கள். லேப்டாப்பில் நாம் பயன்படுத்தும் செயலிகள் நிறைய நேரம் பேக்கிரவுண்டிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். இது நமக்கே தெரியாமல் பேட்டரி சார்ஜைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும். வருடக் கணக்கில் இவற்றை கவனிக்காமல் விட்டால் அதிகளவு பேட்டரியைப் பயன்படுத்தி அதன் ஆயுட்காலத்தைக் குறைத்துவிடும். தேவைப்படும் போது பேட்டரி சேவர் மோடைப் பயன்படுத்தத் தவறாதீர்கள். அனைத்து லேப்டாப்களிலும் இந்த மோடு கொடுக்கப்பட்டிருக்கும்.