LOADING...
Linux அடிப்படையிலான இயங்குதளம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்
ஜொல்லா ஃபோன்

Linux அடிப்படையிலான இயங்குதளம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

எழுதியவர் Prasanna
Mar 09, 2026
02:41 pm

செய்தி முன்னோட்டம்

இந்த ஸ்மார்ட்போன் யுகத்தில் பிரைவசியே பிரதான விற்பனை பொருளாக இருக்கிறது. இந்த நிலையில் பிரைவசியை மையப்படுத்திய ஸ்மார்ட்போன் ஒன்றை சந்தைக்குக் கொண்டு வந்திருக்கிறது ஜொல்லா (Jolla) என்ற ஃபின்லாந்தைச் சேர்ந்த நிறுவனம். ஜொல்லா போன் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் லினக்ஸை அடிப்படையாகக் கொண்ட செயில்ஃபிஷன் என்ற இயங்குதளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை தனித்து இயங்கும் வகையிலான ஒரு ஃபோனாக அந்நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. அப்படியென்றால், நம் போனில் இருந்து எந்தவொரு தகவலும் வெளியே எங்கும் கசியாது, போனைத் தயாரித்த நிறுவனத்திற்குக் கூட.

ஸ்மார்ட்போன்

ஜொல்லா போன் விலை

ஐரோப்பாவில் 649 யூரோக்கள் என்ற விலையில் இந்த ஸ்மார்ட்போனை விற்பனை செய்யவுள்ளது ஜொல்லா. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.70,000-த்திற்கு இணையாகும். இதனை அதிகளவில் விற்பனை செய்யும் எண்ணம் அந்நிறுவனத்திற்கு இல்லை. மாறாக குறைவான அளவு வாடிக்கையாளர்கள் மட்டும் ஈர்த்தால் கூட போதும் என்ற திட்டத்துடனேயே இதனை வடிவமைத்திருக்கிறது. தனியுரிமையை விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் ஃபிசிக்கலாக ஒரு பிரைவசி ஸ்விட்சும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்தி, போனின் மைக், கேமரா மற்றும் ப்ளூடூத் ஆகியவற்றை ஆஃப் செய்து வைத்துக் கொள்ளலாம்.

லினக்ஸ்

சிறப்பம்சங்கள்

ஸ்னோ ஒயிட், காமோஸ் பிளாக் மற்றும் தி ஆரஞ்சு என மூன்று நிறங்களில் இந்த ஜொல்லா ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. 6.36 இன்ச் AMOLED டிஸ்பிளே, 50 MP முதன்மை கேமரா, 13 MP அல்ட்ரா வைடு கேமரா, 5,500 mAh பேட்டரி ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான பல்வேறு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement